Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்:  (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)- வீட்டில் சுபநிகழ்ச்சி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதூகலம்
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதூகலம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
05:07

பரந்த மனப்பான்மையுள்ள மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்களுக்கு குருவால் ஆற்றல் மேம்படும். புதன் தற்போது சாதகமற்ற இடத்தில் இருந்தாலும்,  ஜூலை  21- முதல் ஆகஸ்ட் 5 வரை நற்பலன்  கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் நன்மை குறையும். சுக்கிரன் ஜூலை 26-ல்  இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். ராகு 6-ம் இடமான சிம்ம ராசியில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அவர் ஜூலை 27-ல்  5-ம் இடமான கடக ராசிக்கு வருகிறார். இதனால் தொழிலில் இடையூறு குறுக்கிடலாம்.

கேது 12-ம் இடமான கும்பத்தில் இருந்து பொருள் இழப்பு தந்தாலும்,  அவர் ஜூலை 27ல் 11-ம் இடமான மகரத்திற்கு செல்வதால் செல்வ வளம், ஆரோக்கியம் உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும்.  பணப்புழக்கத்தில் குறைவிருக்காது. அத்தியாவசிய  தேவை சிறப்பாக நிறைவேறும். குடும்ப வாழ்வில் குதூகலம்

உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  ஜூலை 25-க்கு பிறகு  உறவினர்கள்  முன்னேற்றத்திற்கு கை கொடுப்பர்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

தம்பதியிடையே அன்பு நீடிக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.  குறிப்பாக ஆக. 11,12ல் அவர்களால் நன்மை எதிர்பார்க்கலாம்.  ஆக.6, 7, 8ல் உறவினர் வருகையால் நன்மை  கிடைக்கும். ஆனால் ஜூலை 21,22-ல் அவர்களின்  வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை 21- முதல் ஆக 5- வரை புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.  செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  அபார ஆற்றல் பிறக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.   பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு அனைத்தும் மறையும்.

ஆனால்  எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது.  ஜூலை 25,26,27-ல் பகைவர்களை எதிர்க்கும் ஆற்றல் உண்டாகும்.  ஜூலை 20-ந் தேதி வரையும், ஆக. 5- க்கு பிறகும் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் செல்ல நேரிடலாம்.  ஜூலை 17,18, ஆக. 9,10,13,14-ல் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். ஜூலை 25,26,27-ல் எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும்.

பணியாளர்கள் ஜூலை 20- வரையும், ஆகஸ்ட் 5-க்கு பிறகும் கடினமாக உழைக்க நேரிடும்.  ஆனால் உழைப்புக்கு ஏற்ற மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. ஆகஸ்ட் 4, 5-ல்  கோரிக்கை நிறைவேற வாய்ப்புண்டு. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள், ஜூலை 20-க்கு பிறகு ஒன்று சேர்வர். தனியார் துறையில்  இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர்.  சக ஊழியர்கள்  ஒத்துழைப்புடன் இருப்பர்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து பரிசு, பாராட்டு கிடைக்கப்  பெறுவர். புதிய ஒப்பந்தம் எளிதில் கையெழுத்தாகும். சக கலைஞர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  

அரசியல்வாதிகள் சுமாரான வளர்ச்சி காண்பர்.  பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. ஜூலை 25- க்கு பிறகு  புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. தொண்டர் நலனுக்காகப் பணம் செலவழிக்க நேரிடும்.

மாணவர்களுக்கு குருவின் பார்வை பலத்தால் பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டியில் பங்கேற்று  வெற்றி காண்பர். நண்பர்களின் உதவி கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கும். விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். பணப்பயிர்களைத் தவிர்ப்பது நல்லது.  கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. ஜூலை 25- க்கு பிறகு சொத்து வாங்கலாம்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஜூலை 28,29- ஆகியவை அனுகூலமான நாட்களாக அமையும்.  ஜூலை 19,20, ஆகஸ்ட் 15,16-ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

நல்ல நாள்: ஜூலை 19, 20, 25, 26, 27, 28, 29, ஆக. 4, 5, 6, 7, 8, 11, 12, 15, 16
கவன நாள்: ஜூலை 30,31- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,8 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்

* சனிக்கிழமை காக்கைக்கு அன்னம் இடுங்கள்.
* காலையில் நீராடியதும் சூரிய தரிசனம்.
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar