Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை அழகர்கோவில் கள்ளழகர் ... காரைக்கால் சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவம் காரைக்கால் சிவலோகநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூக்குழி இறங்கிய இடத்தில் வைத்த தேங்காய் எடுப்பு: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பூக்குழி இறங்கிய இடத்தில் வைத்த தேங்காய் எடுப்பு: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
12:08

முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வியம்மன் கோயிலில்  41 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதற்காக  கடந்தாண்டு பூக்குழி இறங்கிய இடத்தில் பூஜைகள் செய்து, 3 அடி ஆழத்தில் புதைத்து வைக்கபட்டிருந்த தேங்காய் பயன்படுத்தும் அளவில் மீண்டும் எடுக்கப்பட்டதால்,  பக்தர்கள் பரவசம்  அடைந்தனர். 2016 ல், ஜூலை 17 ல், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிக்காக ஜூலை 16 ல், 27அடி நீளம், 5 அடி அகலத்தில் தச்சுவேலை செய்யபட்டு,  எரியூட்டபட்ட தீயில் 3,500 பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிக்காக 3 அடி ஆழத்தில் நவதானியங்கள், கங்கை நீர், பால், மஞ்சள் அபிேஷகம் நடத்தபட்டு, தேங்காய் வைத்து மூடபட்டது.

இந்தாண்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிக்காக சென்ற ஆண்டு வைக்கபட்ட தேங்காய் எடுக்கும்  நிகழ்ச்சி நடந்தது.  3 அடி ஆழத்தில் புதைக்கபட்டிருந்த தேங்காய் தற்போதுள்ள தேங்காய் போலவே உண்ணும் அளவில் புதிதுபோல் எடுக்கபட்டது. ஓராண்டு கழித்தும் புதிது போல் இருந்த தேங்காயை எடுத்ததால்,  என பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர். இதேபோல் இன்று நடக்கும் பூக்குழி பிரவேச நிகழ்ச்சிக்காக தச்சு பணிகள் செய்யபட்டு, 3 அடி ஆழத்தில் நவதானியங்களுடன் தேங்காய் புதைக்கபட்டது. இத்தேங்காய் அடுத்த ஆண்டு பூக்குழி பிரவேசத்திற்கு முன்தைய நாள் வைத்தது போலவே எடுக்கபடும். 67 ஆண்டுகளாக இதே நடைமுறை பின்பற்றபடுவதாக கோயில் பூசாரி வெங்கடேஷன் தெரிவித்தார். முன்னதாக சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து, காந்திசிலை, பஜார், பஸ் ஸ்டாண்ட், வடக்கூர், அய்யனார் கோயில் வழியாக செல்வியம்மன் கோயிலுக்கு 3 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  ஊர்வலமாக எடுத்து சென்ற பால்குடத்தை அம்மனுக்கு  அபிேஷகம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. திருட்டை தவிர்க்க கோயில் வளாகத்தை சுற்றிலும் 16 சிசிடிவி கேமராக்கள் அமைக்கபட்டு, வீடியோ பதிவுகளை கண்காணிக்க 2 போலீசார் நியமிக்கபட்டுள்ளதாக, டி.எஸ்.பி., ரவி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar