Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்ல சேதி கேட்கணுமா ஆதிசிவன் உறவு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாம ஜெபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2017
03:08

பகவான் நாமத்தை உச்சரிக்கவும்  நாமஜெபம் செய்யவும் அனைவருக்கும் தகுதி இருக்கிறது. அங்கே சாதி மத பேதமில்லை.

சைதன்ய மகாபிரபு இதற்கு சிறந்த உதாரணபுருஷர். இவர் கிருஷ்ண பகவானின் மறு அவதாரம் என்று போற்றப்படுபவர். பக்தியின் ஆழத்துக்கு அவருடைய வாழ்வும் செயலும் ஒரு முன்னுதாரணம். பகவானின் அன்பையும் பிரேமானந்தத்தையும் அநுபவிக்க நாமசங்கீர்த்தனமே வழி என்பதை உலகுக்கு பறைசாற்றினார், சைதன்யர். ராதை கண்ணனிடம் கொண்ட பிரேமையின் ஆழம், பகவானிடம் கொண்ட காதலின் உச்சநிலை, இத்தகைய மனோபாவத்தையே சைதன்யரும் எய்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

சைதன்யர் வங்காளத்தில் நவத்வீப் என்ற ஊரில் 18.02.1486 பிறந்தார். தந்தை ஜகன்நாதமிச்ரா. தாயின் நாமம் சாச்சி. அவருடைய இயற்பெயர், பெற்றோர் சூட்டிய பெயர் விஸ்வம்பரா, பிற்காலத்தில் கிருஷ்ண சைதந்யா என்று அழைக்கப்பட்டார். வஸ்வம்பரா பிறப்பிலிருந்தே கிருஷ்ணனுடைய நாமத்தில் பரவசம் ஆனார். கண்ணனுடைய நாமத்தில் பரவசம் ஆனார். கண்ணனின் நாமத்தைச் சொல்லி ஆடுவதும் பாடுவதும் தான் அவருடைய விளையாட்டு. விஸ்வம்பராவுக்கு நிமை என்ற பெயரும் உண்டு.

நிமை சிறியவனாக இருக்கும்போதே அவருடைய தந்தை காலமானார். தந்தை இறந்த பிறகு குடும்ப பாரம் இவர் தலையில் விழுந்தது. குடும்பத்தைச் சமாளிக்க சில காலம் உபாத்தியாயராக வேலை பார்த்தார். கயாவுக்கு யாத்திரை சென்றபோது ஈஸ்வர பூரி என்பவரை சந்தித்தார். அவர்தான் நிமைக்கு - சைதன்யருக்கு- பக்திச் சுடரை அவருடைய இதயத்தில் ஏற்றி வைத்தார். வீட்டுக்கு திரும்பிய சைதன்யருக்கு கண்ணனுடைய தரிசனம் கிடைத்தது. பின்னர் அவர் கண்ணன் மீது மிகுந்த பித்து கொண்டவராக, பிரேமையில் ஆழ்ந்தவராக நாம சங்கீர்த்தனத்தையே தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டார்.

16-ஆம் நூற்றாண்டில் சாதிக் கொடுமை உச்சத்திலிருந்து. சைதன்யர் அதை எதிர்த்துப் போராடினார். பகவானைத் தொழுவதில் அனைவருக்கும் உரிமை உண்டு. அங்கு சாதி மத பேதமில்லை என்று முழங்கினார். அனைத்து சாதியினரையும் ஒன்று கூட்டி பக்தி மார்க்கத்தில் ஈடுபடவைத்தார்.

அவருடைய உபதேசங்கள் பக்தி மார்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தன. பகவானை அடைய சாதகமான பாதை பக்தி மார்க்கமே சுலபமான வழி என்று பிரகடணம் செய்தார். இதை அடிப்படையாகக் கொண்டு தான் பின்னாளில் கெடியான மார்க்கமும் ஹரே கிருஷ்ண இயக்கமும் தோன்றின.

சைதன்யருக்கு பாகவதமே வேதமாயிற்று. ஜெயதேவரின் பாடல்களும் அவருடைய நாம சங்கீர்த்தனத்துக்கு உயிர் ஊட்டின.

நாம ஜெபம் நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது அநுபவித்தார்க்கு மட்டும் தெரியும். இறைவன் அருளுக்காக இரங்கும் சாதகன் நிலைமைக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு பல படிகளை சாஸ்திரங்கள் வகுத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் பகவான் நாமாவை உச்சாடனம் செய்வது. அந்த நாமங்கள் பகவானின் அருங்குணங்களைச் சொல்லுவன. இறைவன் சர்வ வல்லமை படைத்தவன். அவனுடைய நாமங்களை ஜெபிப்பதன் மூலம் அவனுடைய சக்தியை நாம் பெற முடியும். பல அடியார்களுடைய சரித்திரமே இதற்கு சான்று. பகவானின் நாமத்தை இடைவிடாது ஜெபித்தாலேயே அவர்கள் பேரின்ப நிலையைப் பெற்றார்கள் என்பதையெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு மூலம் அறியலாம்.

இதற்கு சரியான உதாரணம் திரௌபதியின் சரிதமே போதும். அரச சபையில் அவமானம் நேர்ந்தபோது யார் அவர்களுக்கு துணை வந்தார்கள்? கொண்ட கணவர்களா? ஆசார்யார்களா? யாருமில்லை. சாக்ஷாத் பகவானே வந்து அந்த அபலையைக் காப்பாற்றினார். கோவிந்தா! கோவிந்தா!! என்று தன் இரு கரங்களையும் உயரே தூக்கி அவனைச் சரணடைந்த போது தான், கண்ணன் அங்கே நேரடியாகத் தோன்றாவிடினும், யாருக்கும் புலப்படாத வகையில் அவளுடைய மானத்தைக் காத்தான். அவளுடைய ஆடையை இழுத்த அரக்கன் ஆய்ந்து ஓய்ந்து மண்ணில் வீழ்ந்தான்.

ஆழ்வார்களின் பக்தியின் ஆழத்துக்கு திருமங்கை ஆழ்வார் ஒரு சிறந்த உதாரணம். ஆதியில் அவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன். எதிரே வருபவன் பணக்காரனோ, சாதாரணமானவனோ அவருக்கு கவலையில்லை. அவனிடம் உள்ளதைப் பிடுங்கிக் கொண்டு விடுவார். தான் இவ்வாறு அபகரித்த பொருளையெல்லாம் அடியார்க்கு அன்னமிட செலவழிப்பார். இது ஒன்றுதான் அவர் செய்த நல்ல காரியம்.

நோக்கம் என்னவோ நல்லது தான். ஆனால் வழிதான் சரியில்லை. ஒரு சமயம் ஸ்ரீமந்நாராயணனே இலட்சுமியுடன் பொன்னாபரணங்கள் நிறைய பூண்டு மானிட உருவில் அவர் முன் வந்து நின்றார். <உடல் முழுவதும் நகைகளைக் கண்ட ஆழ்வார் சும்மா விடுவாரா? எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு ஒரு மூட்டையாகக் கட்டினார். ஆனால் அதைத் தூக்கத்தான் முடியவில்லை.

உடனே மனிதவுருவில் வந்த பகவான் இந்த நகை மூட்டையைத் தூக்க வேண்டுமானால் ஒரு எளிய உபாயம் உள்ளது. சொல்லட்டுமா? என்றார்.

என்ன என்று கேட்டார் ஆழ்வார்.

அதுதான் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரம், அப்பனே! அதைச் சொல்லிக் கொண்டே தூக்கு என்றார்.

திருமங்கை ஆழ்வாரின் அகக்கண் அப்போது தான் திறந்தது. தன் முன் நின்றவர் ஸ்ரீமந்நாராயணனும் இலக்குமி தேவியும் என்பதை உணர்ந்து உள்ளொளி பெற்றார்.

அவருடைய வாழ்க்கையையே மாற்றி விட்டது ஓம் நமோ நாராயணாய என்கிற எட்டு எழுத்து மந்திரம். பகவானின் நாம மந்திரமே சாத்திரங்களின் சாரம். அதுவே சம்சாரக் கடலைக் கடக்கும் படகு. ஒருவனுக்கு சகல சம்பத்துக்களையும் அளிக்க வல்லது பகவன் நாமமே. திருமங்கை ஆழ்வாரின் கொடூர குணம் மாறியது. தேவியுடன் நாராயணனின் திவ்ய தரிசனம் அவரை திருமங்கை ஆழ்வாராக மாற்றியது. அவருடைய உள்ளத்தில் தெய்வீக ஒளி பரவியது. கொள்ளைக்காரன் மனத்தை இறைவன் கொள்ளை கொண்டான். அவருடைய உள்ளத்திலிருந்து எண்ணற்ற பாசுரங்கள் வெளிவந்தன. பகவானின் நாமத்தை உச்சரிப்பதாலும் தியானிப்பதாலும் ஏற்படும் அநுபவங்களையெல்லாம் தன் பாசுரங்களில் அற்புதமாக வெளியிடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar