Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதூகலம் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - கையில் பணப்புழக்கம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)- வீட்டில் சுபநிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
09:47

செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே!   

சுக்கிரன் தற்போது 3-ம் இடத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவர் ஆக. 21-ல்  கடக ராசிக்கு சென்றாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்.  புதன் தற்போது 4-ம் இடத்தில் இருந்து  நன்மைகள் தந்து கொண்டிருக்கிறார். அவர்  செப். 2-ல் சிம்ம ராசிக்கு செல்வதால் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது.

குருபகவான் செப்.1- வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்து மன நிம்மதியை இழக்க செய்வார். வீண் பகையும், விரோதமும் உருவாகும்.  செப்.2- முதல்  7-ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும்.

ஆக. 21- வரை சுக்கிரன் 3-ல் இருப்பதால்  கணவன்-, மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்களால் உதவி கிடைக்கும்.

பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செப்.2-க்கு பிறகு அலைச்சல் இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். தம்பதியிடையே மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. பொறுமையுடன் விட்டுக் கொடுத்துப் போக வாய்ப்புண்டு.
பிள்ளைகளால் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. செப்.5,6-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  ஆக. 20,21, செப்.16 ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். செப். 10,11-ல் பெண்கள்  உதவிகரமாக இருப்பர். விருந்து,விழா என சென்று வருவீர்கள்.பயணத்தின் போது  கவனம் தேவை.

சிலருக்கு கேதுவால் உஷ்ணம், தோல் தொடர்பான பிரச்னை வரலாம். செவ்வாயால் ஆக. 28 க்கு பிறகு உடல்நலம்  பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சீராக இருக்கும். லாபத்திற்கு குறைவிருக்காது.  எதிரிகளின் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொழில் முயற்சியை தவிர்ப்பது நல்லது. அதிக முதலீடு வேண்டாம். செப். 2க்கு பிறகு வளர்ச்சியும், பணவரவும் இருக்கும்.

ஆக.24,25 ல் திடீர் வருமானம் கிடைக்கும்.  பகைவரை வெல்லும்  ஆற்றல் பிறக்கும். ஆக.17, செப்.7,8,9,12,13-ல்  சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.

பணியாளர்களுக்கு  அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால் செப்.2க்கு பிறகு அதிகமாகஉழைக்க வேண்டியதிருக்கும் சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். செப்.3,4-ல் சந்திரனால் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.

கலைஞர்கள்- புதிய ஒப்பந்தம்  எளிதில் கிடைக்கப் பெறுவர். முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள், உழைப்பிற்கு ஏற்ற பலனை பெற முடியாமல் போகலாம்.

மாணவர்கள்- புதனால்  நன்மை கிடைக்கப் பெறுவர். செப். 2-க்கு பிறகு  விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். போட்டி, பந்தயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது அரிது. குருவால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும்.

விவசாயிகள்- சுமாரான வருமானம் கிடைக்கப் பெறுவர்.  சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம். பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஆக.26,27,28-ல் சிறப்பான பலன் காணலாம். ஆக. 18,19, செப். 14,15ல்  ஆடை, ஆபரணம் கிடைக்க வாய்ப்புண்டு.

நல்ல நாள்: ஆக. 18, 19, 24, 25, 26, 27, 28,
செப். 3, 4, 5, 6, 10, 11, 14, 15
கவன நாள்: ஆக. 29, 30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4, 7
நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்
* செவ்வாயன்று முருகனுக்கு நெய் தீபம்
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* புதன்கிழமையில் குலதெய்வ வழிபாடு

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.