Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - முயற்சியில் வெற்றி விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - பதவி உயர்வு கிடைக்கும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ஆடம்பர வசதி பெருகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
10:04

குருவை ஆட்சி கிரகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
சுக்கிரன் ஆக. 21-க்கு பிறகு சாதகமான இடத்திற்கு வருவதால் நன்மை உண்டாகும். ஆனால் அவர் செப்.15-ல் சாதகமற்ற  நிலைக்கு செல்வதால் நன்மை குறையத் தொடங்கும்.

குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பல்வேறு பிரச்னையைத் தந்து கொண்டிருந்தார். அவரால் பொருள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலர் பதவி இழக்கும் நிலைக்கும் ஆளாகி இருக்கலாம்.  இந்நிலையில் செப்.2-ல் குரு பகவான் 11-ம் இடமான துலாம் ராசிக்கு மாறுவது சிறப்பான அம்சமாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வை மூலம் நன்மை அதிகரிக்கும்.

பொருளாதார வளம் சிறப்பாக இருந்தாலும் அவ்வப்போது தடைகளை சந்திக்க நேரிடும். சூரியனால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. புதனால் செப். 2 க்கு பிறகு சிலரது பொல்லாப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அனைவரிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

குடும்பத்தேவை குறையின்றி பூர்த்தியாகும். ஆக.21க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகி குடும்பத்தில் மகிழ்ச்சி குடியிருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக ஆக.31, செப்.1,2- ல் பெண்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக. 26,27,28-ல்  உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் செப். 7,8,9-ல்  அவர்கள் வகையில் பிரச்னை குறுக்கிடலாம்.  சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. செப்.2க்கு பிறகு  கணவன்-, மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது.  

சிறு பிரச்னைகள் உருவாகி மறையும். செவ்வாயால் உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில்  மாதத்தின் தொடக்கத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில்  வளர்ச்சி அடையும். ஆக. 29,30, செப். 3,4-ல்  பண விரயம் ஆகலாம்.ஆக.17, செப்.12,13-ல் மறைமுக போட்டியாளர்களை வெல்லும் ஆற்றல் பிறக்கும். புதனால் செப்.2- க்கு பிறகும் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.

பணியாளர்கள் புதனின் பலத்தால் சிறப்பான நிலையில் இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும்.  கோரிக்கைகள்  எளிதில் நிறைவேறும். செப்.2- க்கு பிறகு வேலையில் அதிக பளுவும் அலைச்சலும் இருக்கும். அதே சமயம் பிரச்னைகள் அனைத்தும் குருவால் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தோடும். ஆக.24,25ல்  எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஆக. 21க்கு பிறகு மறையும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்காலத்தில் அதற்கான பலன் கிடைக்கும்.

மாணவர்கள்-  புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். செப்.2- க்கு பிறகு குரு பக்கபலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி உண்டாகும். விவசாயிகள்- கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.  வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும்.

பெண்களுக்கு  குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி பெறுவர். வேலையில் திறமை பளிச்சிடும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை காணலாம். செப். 2-க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.  ஆக.18,19,செப்.14,15ல் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். விருந்து. விழா என சென்று வருவீர்கள். செப். 5,6-ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.

நல்ல நாள்: ஆக.17,18,19,24,25,26,27,28,29,31, செப். 1,2,5,6,12,13,14,15
கவன நாள்: ஆக. 20,21, செப். 16- ல் சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:  5,8
நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்
* சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்விளக்கு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு.

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை ... மேலும்
 
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.