Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம்: ... 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கற்றளி கோவில் கண்டுபிடிப்பு 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கற்றளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ஆவணிவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் ஆவணிவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2017
11:08

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூணுகிறது.ஆவணி மூலத்திருவிழா நேற்று காலையில் சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன்துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 4ம் திருநாளான வியாழன்று சுவாமி, அம்பாள், விநாயகர்,

சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதியுலா நடக்கிறது. 29ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நான்கு ரதவீதிகளில் வலம் வருவார். பதிணென் சித்தர்களுள் ஒருவர் கருவூர் சித்தர். இவர் செய்த கடுந்தவத்திற்கு அஷ்டசித்திகளும் கிடைத்தன. அவர் எப்போது சிவபெருமானைக் காண வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் சிவபெருமான் அவருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தார். நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக காத்திருப்பார். அப்போது வழிபாடு நடந்ததால், சுவாமி காட்சி தரவில்லை. இதனால் வெகுண்டெழுந்த கருவூர் சித்தர், "நெல்லையப்பர்கோயிலில் எருக்கும் குருக்கும் எழுக என சாபமிட்டுவிட்டு நடை பயணத்தில் மானூரில் இருக்கும்அம்பலவாணமுனிவரை சந்திக்க சென்றுவிடுவார். இதற்கு மறுநாள் ஆக 30ல் இரவு ஒரு மணியளவில்,நெல்லையப்பர் சுவாமி, சந்திரசேகரராகவும், காந்திமதியம்மை, பவானிஅம்பாளாகவும், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய நாயனார் ஆகியோருடன் பல்லக்கில் சங்கரன்கோவில்ரோட்டில் இருக்கும் மானூர் அம்பலவாணமுனிவரின் இருப்பிடம் செசன்றடைகின்றனர். 31ம் தேதிகாலையில் அங்கு சிவனை கண்ட, கருவூர் சித்தரும், அம்பலவாணமுனிவரும் மகிழ்ச்சியடையவர். 31ம் தேதி காலை 7.30 மணிக்கு அங்கு வரலாற்றுப்புராண பாடல் நிகழ்வும் சுவாமிக்கு சித்தரிடம் இருந்து சாப விமோசனமும் கிடைக்கிறது. அதன் பிறகு சுவாமி, அம்பாள் நெல்லையப்பர் கோயில் திரும்புவர்.இந்த 11 நாள் திருவிழாவிற்காக நெல்லையப்பர் கோயில் தற்போது தயாராகிவருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
போடி; ராம நவமியை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் லட்சுமணர், சீதையுடன், ராமருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருமலை ஸ்ரீவாரி கோயிலில் புதன்கிழமை ஸ்ரீராமநவமி ஆஸ்தானத்தை முன்னிட்டு ஸ்ரீ சீதாராம லட்சுமணருடன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே திருமண வரம் தரும் திருமணஞ்சேரி உத்வாகநாதர்  சுவாமி ஆலயத்தில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கைகாட்டி புதூர் அம்பேத்கர் வீதியில் 13 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar