Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரி தாய் சிலை பிரதிஷ்டை மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ...
முதல் பக்கம் » காவிரி மகா புஷ்கரம் - 2017
144 ஆண்டுக்கு பின் மகா புஷ்கர விழா
எழுத்தின் அளவு:
144 ஆண்டுக்கு பின் மகா புஷ்கர விழா

பதிவு செய்த நாள்

11 செப்
2017
10:09

நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவம் அனைத்தும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் மூலம் நீங்கும். 144 ஆண்டுக்கு பின் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கர விழா நடக்கிறது. கங்கையில் நீராடிய புண்ணியம், துலா எனும் ஐப்பசி மாதத்தில், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடினால் கிடைக்கும். புராண காலத்தில் கன்ம மகரிஷியை கருத்த நிறத்தில் உள்ள மூன்று மங்கையர் தரிசித்தனர். ’நீங்கள் யார்’ என வினவும் போது தாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் என கூறினர்.

அத்துடன் மனிதர்கள் தாங்கள் செய்த பாவத்தை தங்களிடம் கொட்டி தீர்த்ததால் கருமை அடைந்து விட்டதாகவும், பாவத்தை போக்க வழி செய்ய வேண்டும் எனவும் கேட்டனர்.அதற்கு கன்ம மகரிஷி, ’நீங்கள் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசியில் நீராடி மாயூரநாதர், பரிமள ரங்கநாதரை தரிசிக்க  ஆவணி கிருத்திகை ஆண்டு விழாபாவம் தீரும்’ என்றார். அதன்பின் அந்த நதிகள் துலா மாதத்தில் காவிரியில் நீராடி பாவம் போக்கியதாக புராணம் கூறுகிறது.மயிலாடுதுறை காவிரியில் நாளை முதல் செப்., 24 வரை காவிரி மகா புஷ்கர விழா நடக்க உள்ளது.

காவிரி புஷ்கரம் விழா:  ஒருமுறை நவகிரகங்களில் ஒருவரான வியாழன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தார். தவத்தை மெச்சிய பிரம்மா குருவின் கோரிக்கையை கேட்டார். அதற்கு குரு, தங்களின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தத்தை தாருங்கள் என்றதும் பிரம்மா சம்மதித்தார்.ஆனால் புஷ்கரம், ’என்னை உங்களிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்’ என வேண்டியது. இதன்பின் குருவுக்கும் புஷ்கர தீர்த்தத்திற்கும் இடையே ஒரு உடன் படிக்கையை மேற் கொண்டார் பிரம்மா.அதாவது புஷ்கரமானது குரு பகவான் சஞ்சரிக்கும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளிலும் வாசம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.இதன்படி புஷ்கரம் விழா ஒவ்வொரு வருடமும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.

புஷ்கர நீராடல் விதிப்படி மயிலாடுதுறை மாயூர நாத சுவாமி கோயிலில் இருந்து அபயாம்பிகையுடன் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு வள்ளலார் வதான்யேஸ்வரர் தேவியுடன் எழுந்தருளி ரிஷப தீர்த்தத்தில் 12 நாளிலும் தீர்த்தம் அருளுவர். தீர்த்தம் அருளும் காலமறிந்து நீராடி தானமளித்த பின் மாயூரநாதர், வதான்யேஸ்வரர், வள்ளலார், பரிமள ரெங்கநாதர் மற்றும் அருகிலுள்ள சுற்றுக் கோயில்களையும் தரிசிக்க வேண்டும்.காவிரி மகா புஷ்கரம் விழாவிற்காக ’மயிலாடுதுறை- 2017’ என்று பெயரில் அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.

12 நாள் திருவிழா: மகா புஷ்கரம் விழா தொடக்க நாளான நாளை பக்தர்கள் வேதவியாசர், காவிரி தேவி படத்துடன் மயிலாடுதுறை துலாக் காவிரியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாதஸ்வரம், யானை, குதிரை, காளைகளுடன் பயணித்து, மீண்டும் துலாக்கட்ட காவிரிக்கு வந்து பூஜைகளைத் தொடங்கி வைப்பர். ஹோமம், திதி தர்ப்பணம், நீத்தார் கடன் செய்ய, வேத விற்பன்னர்கள், பட்டர்கள், சிவாச் சாரியார்கள் அவரவர் சம்பிரதாயப்படி செய்ய அமர்ந்திருப்பர். 12 நாட்களிலும் வேத, ருத்ர பாராயணம், திருமுறை முற்றோதல், லலிதா, விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம், காவிரியில்ஆரத்தி எடுத்தல் நடை பெறும். கலை நிகழ்ச்சி களும், ஆன்மிக சொற் பொழிவுகளும் உண்டு.விழா தொடர்புக்குசுவாமி ராமானந்த மகராஜ் - தலைவர் : 94868 47005, மகாலட்சுமி- - ஒருங்கிணைப்பாளர்: 98400 53289, முத்துக்குமாரசாமி - செயலர் : 93446 46553

 
மேலும் காவிரி மகா புஷ்கரம் - 2017 »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின் காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகல தொடங்கியது. காஞ்சி ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் காவிரியில் மகா புஷ்கரம் விழா துவங்கியதையடுத்து, அம்மா மண்டபப்படித்துறை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி அகில பாரதிய துறவியர் சங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள காவிரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் காவிரி மஹா புஷ்கரம் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar