Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ... மயிலாடுதுறையில் காவிரிக்கு மகா ஆரத்தி வழிபாடு மயிலாடுதுறையில் காவிரிக்கு மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மகா புஷ்கரம் விழா: பக்தர்கள் திதி கொடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2017
18:12

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா நேற்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை 12 நாட் களுக்கு நடைபெறுகிறது. 2வது நாளான இன்று(செப்13ல்) மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது மூதாரதயர்களுக்கு திதி கொடுத்து, காவிரியில் புனிதநீராடினர்.

தொடர்ந்து அவர்கள் காவிரி தென் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாயையும், வட கரையில் எழுந்தருளியுள்ள சுவாமி, அம்பாளையும் தரிசனம் செய்தனர். இந்நிலையில் காவிரி துலாக்கட்டத்தில் புனிதநீராட வரும் பக்தர்கள் நீர்தேக்கத்தில் பழைய துணிகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைகளை விட்டுசெல்ல வே ண்டாம் என விழாக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர்.  புஷ்கரம் விழாவையொட்டி காவிரி வடக்கு கரையில் 12 நாட்களுக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.

தோஷங்கள் நீங்கும் நவக்கிரக ஹோமம் நடைபெற்து. சிதம்பரம் தியாகப்பா தீட்சதர் தலைமையில் தீட்சதர்கள் சிறப்பு ஹோமம், பூர்ணாஹுதியாகி, மகா தீபாராதனை செய்யப்பட்டு, கடம் புறப்பட்டு சிதம்பரம் அன்னபூரனி அம்பாள் சமேத அன்ன பூரீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகள் காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி காவிரியில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை கலெக்டர் சுரேஷ்குமார், தனி அலு வலர் வெங்கடேசன், ஆர்.டி.ஓ.காமராஜ், தாசில்தார் காந்திமதி மற்றும் பலர் கலநதுகொணடனர்.
காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழகம் மட்டுமன்றி பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடி வருகின்றனர்.

இந்நிலையில் மதியம் பெங்களூரைச் சேர்ந்த சுவாமி சர்வேஸ்வர் தலைமையில் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த லாரன்ஸ், இல்கிசர், கலினா ஆகியோர் அடங்கிய குழுவினர் காவிரி துலாக்கட்டத்திற்கு வந்து காவிரியை வணங்கி, வழிபட்டனர். பின்னர் அவர்கள் அருகில் பிரதிஷ்டை செய்யப்ட்டுள்ள காவிரி தாயையும் வழிபட்டனர். காவிரி மகா புஷ்கரம் விழாவின் 2ம் நாளில் காவிரி துலாக்கட்டத்தை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் கூறுகையில் மகா புஷ்கரம் விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் சிரமமின்றி மகிழ்ச்சியுடன் புஷ்கரத்தில் நீராடி செல்ல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புஷ்கரத்தில் பழைய தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேற்றப்படுவதுடன், இரவில் புதிய தண்ணீர் மாற்றப்படுகிறது. மேலும் மேட்டூரில் திறக்கப்பட்டுள்ள தண்ணர் விரைவில் வந்துவிடும் என தெரிவித்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது.  ... மேலும்
 
temple
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்
 
temple
ராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்
 
temple
குன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்
 
temple
சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.