Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  முயற்சியில் வெற்றி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - போட்டியில் வெற்றி மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - பெண்களால் நன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
15:08

சாதுர்ய குணத்தால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

இம்மாதம் புதன் செப்.22 வரையும் அக்.9க்கு பிறகும் நன்மை தருவார். சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவர். பொருளாதாரம் மேம்படும். இருப்பினும் செலவை குறைத்து சிக்கனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். மாத பிற்பகுதியில் பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில்இருப்பதால்எந்த செயலும் நிறைவேற, விடாமுயற்சி தேவைப்படும். மாததொடக்கத்தில்பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிநிலைக்கும்செப்.23ல் இருந்து அக்.9 வரை சற்று பொறுமை தேவை. கணவன், மனைவிஇடையே கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகவும்.

பிள்ளைகள் வகையில் எதிர்பார்த்தபலன்கிடைக்காது. அக்.5,6ல் உறவினர்கள் வருகையும்  அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் செப்.18,19 அக்.15,16,17ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். அக். 9,10ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவர். அக்.9க்கு பிறகு அடிக்கடி சுப
நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். உடல்நிலை சுமாராக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை அக்.15க்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த பிற்போக்கு நிலை மாறும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். மாத முற்பகுதியில் கூட்டாளிகள் வகையில் அனுகூலம் ஏற்படும். பணப்புழக்கம் சீராக இருக்கும். செப். 23ல் இருந்து அக்.9 வரை அலைச்சல் அதிகரிக்கும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். செப். 23,24ல் எதிர்பாராத வகையில் பணம் வரும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அக்.7,8,11,12ல் பண விரயம் ஆகலாம். முயற்சியில் தடை குறுக்கிடலாம். செவ்வாயால் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து அக். 15 க்கு பிறகு விடுபடுவர்.

பணியாளர்கள் செப்.23ல் இருந்து அக்.9 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. கோரிக்கை நிறைவேறுவது சற்று கடினம் தான். சிலருக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். அக்.9க்கு பிறகு நிலைமை சீராகும். அதன் பின் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேரலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். மாத இறுதியில் நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. அரசியல்வாதிகள், பொது நல
சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர்.  

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். செப்.23ல் இருந்து அக்.9 வரை படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். கோதுமை, பழவகைகள் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். கால்நடை வகையில் எதிர் பார்த்த வருமானம் கிடைக்காது. வழக்கு எதிலும் ஈடுபட வேண்டாம்.

பெண்களின் வாழ்வில் குதூகலம் அதிகரிக்கும். அக்.9க்கு பிறகு சுபநிகழ்ச்சிகள் கைகூடும். மாத தொடக்கத்தில் உற்சாகமாக செயலாற்றுவர். தோழிகளால் நன்மை உண்டாகும். புனித தலங்களுக்கு சென்று வருவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். செப்.23ல் இருந்து அக்.9 வரை புதன் சாதகமற்று இருப்பதால் பொறுமையை கடைபிடிக்கவும். வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். சிரத்தை எடுத்தால் தான் கோரிக்கை நிறைவேறும். செப்.17, அக்.13,14ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.

நல்ல நாள்: செப். 17, 23, 24, 25, 26,
அக். 2, 3, 4, 5, 6, 9, 10, 13, 14
கவன நாள்: செப். 27, 28, 29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,7    நிறம்: நீலம், வெள்ளை

பரிகாரம்
● தினமும் காலையில் சூரிய வழிபாடு
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விளக்கு
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018) »
temple
தர்மவழியில் வாழ்வு நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், ராகு மாதம் ... மேலும்
 
temple
சகோதர பாசம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க ... மேலும்
 
temple
வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கடக  ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 2ல் இடம் மாறினாலும் மாதம் ... மேலும்
 
temple
சந்ததிக்கும் புண்ணியம் தேடும் சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.