Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - பெண்களால் நன்மை ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - சொத்து சேரும் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2018 – 13.4.2018)
மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
15:10

கடமையை உயிராக மதிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

இம்மாதம் புதன், செப்.23ல் இருந்து அக்.9 வரையும், செவ்வாய் அக்.15 வரையும் நற்பலன் தருவர். சுக்கிரன், சனி, குருவாலும் நற்பலன் தொடரும். முக்கிய கிரகங்கள் சாதகமாக காணப்படுவதால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கலாம். தெய்வ
அனுகூலம் கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

செப்.22க்கு பிறகு சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அக்.11,12ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். செப்.19,20ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் செப்.20,21,22ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அக்.10க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கணவன், மனைவி இடையே பிரச்னை வந்து மறையும்.விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலம் சுமாராக இருக்கும். அக். 15 க்கு பின், பயணத்தின் போது கவனம் தேவைதொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். பகைவர் இடையூறு, அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு முதலியன செப்.22 க்கு பிறகு மறையும்.

வரவு செலவு கணக்கை சரியாக வைத்து கொள்ளவும். அதன் பிறகு நிலைமை சீராகும். செப்.17,அக்.9,10,13,14 ல் சந்திரனால் பண விரயம் ஆகலாம். முயற்சியில் தடைகள்
குறுக்கிடலாம். செப்.25,26ல் எதிர்பாராமல் வருமானம் கிடைக்கும். அக்9க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பணியாளர்கள் மாத முற்பகுதியில் கவனமுடன் இருக்கவும். சகஊழியர்கள் மத்தியில் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. செப்.22க்கு பிறகு புதன், சாதகமான நிலையில் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். வேலைப் பளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். விண்ணப்பித்த கடனுதவி எளிதில் கிடைக்கும். அக்.9 க்கு பிறகு வேலை
நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அக்.9 க்கு பிறகு நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் காண்பர். செப்.23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.அக்.14க்கு பின் புகழ், கவுரவத்திற்கு பங்கம் வராது.

மாணவர்கள் செப்.22க்கு பிறகு கல்வியில் வளர்ச்சியடைவர். புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெற்றி காண்பர். அக்.9க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது
நல்லது.

விவசாயிகள் நல்ல வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பிலும் போதிய வருவாய் கிடைக்கும். செவ்வாய் சாதகமாக காணப்படுவதால் புதிய சொத்து வாங்க யோகமுண்டு. அக்.14 க்கு பிறகு வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் பெறுவர். கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். செப்.22க்கு பிறகு சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். செப்.18,19, அக்.15,16,17ல் ஆடை, அணிகலன் சேரும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரபெறலாம். செப்.27,28,29ல் சகோதரிகளால் நன்மை உண்டாகும்.

நல்ல நாள்: செப். 18, 19, 25, 26, 27, 28, 29, அக்.5, 6, 7, 8, 11, 12, 15, 16, 17
கவன நாள்: செப்.30,அக்.1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5      
நிறம்:சிவப்பு,மஞ்சள்

பரிகாரம்
● வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
● புதன்கிழமையன்று குலதெய்வ வழிபாடு
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2018 – 13.4.2018) »
temple
அன்பும் பண்பும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் ... மேலும்
 
temple
நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் ஒன்றான ராகு 3-ம் இடத்தில் ... மேலும்
 
temple
பிறர் நலன் பேணும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 10-ல் புதனும், சூரியனும் ... மேலும்
 
temple
காலத்தை பொன்னாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாய், சனி தொடர்ந்து நற்பலன் ... மேலும்
 
temple
சிந்தனையில் புதுமை படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், புதன் இணைந்து நன்மை தருவர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.