Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - போட்டியில் வெற்றி மிதுனம்: (மிருகசிரீடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) - அரசின் சலுகை சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) - ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2017- 15.12.2017)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - சொத்து சேரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
15:14

லட்சிய உணர்வுடன் பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன் அக்.10ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். சூரியனின் நன்மை பன்மடங்கு அதிகரிக்கும். புதன் அக்.9க்கு பிறகும், செவ்வாய் அக்.14 க்கு பிறகும் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். புதிய முயற்சியை வெற்றிகரமாக முடிக்கலாம். சூரியனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருள் விரயம் இனி இருக்காது. பொருளாதார வளம் கூடும். புதனால் ஏற்பட்ட அவப்பெயர் அக்.9க்கு பின் மறையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

குடும்பத்தில் அக்.9க்கு பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதி இடையே அன்பு மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க நல்ல நேரம் கூடி வரும். செப்.17,அக்.13,14ல் பெண்கள் உறுதுணையாக இருப்பர். அக்.9,10ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால், செப்.23,24ல் அவர்கள் வகையில் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். அக்.14க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். உடல்நலம் சிறப்படையும். மருத்துவ செலவு குறையும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் வீடு திரும்புவர்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பகைவர் வகையில் தொல்லை குறுக்கிடலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு
செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அக்.9க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்தலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். செப்.27,28,29ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். செப்.18,19, அக்.11,12,15,16,17ல் முயற்சியில் தடை குறுக்கிடலாம்.

பணியாளர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் திறமைக்கு ஏற்ற மதிப்பும் வருமானமும் கிடைக்கும். புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் கவலை செப்.22க்கு பிறகு மறையும்.

அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும். அக்.7,8ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். அக்.9 க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.

கலைஞர்களுக்கு தட்டி பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். எளிதில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் அக்.14க்கு பிறகு, புதிய பதவி கிடைக்க பெறுவர்.

சமூகநல சேவகர்கள் திருப்திகரமாக இருப்பர்.  மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முயற்சியில் தடை ஏற்படும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அக்.9க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அதிக முதலீடு உள்ள பயிர்களைத் தவிர்ப்பது நல்லது. காய்கறி, பழவகைகள், மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். அக்.14க்கு பிறகு நிலப்பிரச்னை தீரும். புதிய சொத்து வாங்க யோகம் உண்டு. வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை சேரும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை தேவைப்படும். அக்.9க்கு பிறகு நிலைமை சீராகும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. செப்.20,21,22ல் ஆடை,
ஆபரணம் வாங்கலாம். செப்.30, அக்.1ல் விருந்து விழா என சென்று வருவர்.
சகோதர வகையில் உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: செப். 17, 20, 21, 22, 27, 28, 29, 30,  அக். 1, 7, 8, 9, 10, 13, 14
கவன நாள்: அக். 2, 3, 4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1, 9   நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்
● வியாழக்கிழமை தட்சணாமூர்த்தி வழிபாடு
● சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
● திங்கட்கிழமை சிவன் கோயிலில் நெய்தீபம்

 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2017- 15.12.2017) »
temple
நல்லவர் கருத்தை மதிக்கும் மேஷ ராசி அன்பர்களே!

செவ்வாயால் மாத முற்பகுதியில் நன்மை மேலோங்கும். ... மேலும்
 
temple
வெற்றி மனப்பான்மையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய் டிச.2ல் இருந்து நற்பலன் தர ... மேலும்
 
temple
நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் நவ.28க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற ... மேலும்
 
temple
அனைவரிடமும் அன்பு காட்டும் கடக ராசி அன்பர்களே!

புதன்  இந்த மாதம் சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரனின் நற்பலன்கள் மாதம் முழுவதும் தொடரும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.