Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) - அரசின் சலுகை சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) - ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - வாகன யோகம் துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) - அபார ஆற்றல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
15:17

பெற்றோர் மீது பாசம் மிக்க கன்னி ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு,சனி,ராகு தொடர்ந்து நன்மை செய்வர். சுக்கிரன் அக்.10க்கு பிறகு சாதகமான இடத்துக்கு மாறுகிறார். சனி,ராகுவால் செயலில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பொன்,பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். அபார ஆற்றல் பிறக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். அக்.10 க்கு பிறகு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வாழ்வில் நன்மை சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

செப்.20,21,22ல் பெண்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.செப்.17,அக்.13,14 ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் செப்.27,28, 29ல் உறவினாகள் வகையில் பிரச்னை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.22க்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்.9க்கு பிறகு சிலருக்கு வீண்கவலை வரலாம்.

உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. சூரியனால் அலைச்சலும், சோர்வும் ஏற்பட வாய்ப்புண்டு. செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதை வரலாம்.

தொழில், வியாபாரத்தில் சூரியனால் கடந்த மாதம் ஏற்பட்ட நஷ்டம், பிரச்னை இனி இருக்காது. இந்த மாதம் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். செப்.18,19,23,24, அக்.15,16,17ல் சந்திரனால் சிறு தடைகளை சந்திக்கலாம். அக்.2,3,4ல் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. அக்.10க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். புதிய வியாபார முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். வேலையில் பொறுமை காப்பது நல்லது. ஆனால் குருவால் அக்.10க்கு பிறகு நிலைமை சீராகும். விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். விண்ணப்பித்த  கடனுதவி கிடைக்கும். அக்.11,12 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் சிறப்பான புகழோடு வருமானமும் பெறுவர். புதிய ஒப்பந்தம் எளிதில்
கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்க பெறுவர். சமூகநல சேவகர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. நண்பர்களால் சிலர் அவப்பெயருக்கு ஆளாகலாம். சற்று விழிப்புடன் இருக்கவும். ஆனால் குருபலத்தால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் துணைநிற்கும்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். விளைச்சல் சுமாராக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடும். கால்நடைகள் மூலம் ஓரளவு லாபம் வரும். பக்கத்து நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது. வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரிடம் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். சுய தொழில் செய்து வரும்
பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப்.22க்கு பிறகு அக்கம்
பக்கத்தினருடன் கருத்துவேறுபாடு உருவாக வாய்ப்புண்டு. செப்.25,26ல் ஆடை,
அணிகலன்கள் சேரும். அக்.5,6 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

நல்ல நாள்: செப். 17, 20, 21, 22, 25, 26, அக். 2, 3, 4, 5, 6, 11, 12, 13, 14
கவன நாள்: அக்.7, 8 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 7      
நிறம்: மஞ்சள், கருப்பு

பரிகாரம்
● செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018) »
temple
தர்மவழியில் வாழ்வு நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், ராகு மாதம் ... மேலும்
 
temple
சகோதர பாசம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க ... மேலும்
 
temple
வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கடக  ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 2ல் இடம் மாறினாலும் மாதம் ... மேலும்
 
temple
சந்ததிக்கும் புண்ணியம் தேடும் சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.