Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - வாகன யோகம் துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - எதிர்பாராத பணவரவு தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - கையில் பணப்புழக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
15:21

அன்பால் பிறரை அரவணைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன், புதன், கேது ஆகியோரால் நன்மை உண்டாகும்.  சுக்கிரன் அக்.10க்கு பிறகும், செவ்வாய் அக்.14க்கு பிறகும் நற்பலனை கொடுப்பர். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கிரகங்களின் பலத்தால் எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமை
பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

குடும்பத்திற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். செப்.25,26ல் பெண்கள் மூலம் நன்மை உண்டாகும்.  விருந்து விழா என சென்று வருவீர்கள். செப். 20,21,22ல் உறவினர்கள் வருகையும் அவர்களால்
நன்மையும் கிடைக்கும். ஆனால் அக்.2,3,4ல் அவர்கள் வகையில் கருத்து
வேறுபாடு வர வாய்ப்புண்டு. எனவே சற்று ஒதுங்கி இருக்கவும்.

உடல்நிலை திருப்தியளிக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. உஷ்ண, தோல் நோய்கள் அக்.14க்கு பிறகு பூரண குணமாகும். ராகுவால் அவ்வப்போது பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விரிவாக்க பணிக்கான  வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய வியாபார முயற்சியில் ஈடுபட ஏற்ற காலகட்டம்.  அக்.7,8ல் தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும். செப்.23,24,27,
28,29 ல் தடைகளை சந்திக்கலாம்.

பணியாளர்கள் வேலையில் நிம்மதி கிடைக்க பெறுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு  கிடைப்பதில்  தடையேதுமில்லை. பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். செப்.18,19, அக்.15,16,17 சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள்  புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.
எதிரிகள் வகையில் இருந்த தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன
அக்.10க்கு பிறகு மறையும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். அக்.15க்கு பிறகு பணப்புழக்கம் உயரும். எதிர்பார்த்த பதவியைப் பெற விடாமுயற்சி தேவைப்படும்.

மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் வளர்ச்சி உண்டாகும். கலை, விளையாட்டுப் போட்டிகளில்  பங்கேற்று வெற்றி
காணலாம்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். மஞ்சள், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைகள் மூலம் நல்ல வருமானத்தை காணலாம். அக்.15 க்கு பிறகு சொத்து, நிலம் வாங்க வாய்ப்புண்டாகும்.  வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபடுவர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.  விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். செப்.30, அக்.1ல்  ஆடை,
அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வர பெறலாம். அக்.9,10ல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். செவ்வாயால் சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும்.

நல்ல நாள்: செப். 18, 19, 20, 21, 22, 25, 26, 30,  அக். 1, 7, 8, 9, 10, 15, 16, 17
கவன நாள்: அக்.11, 12 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7, 9   
நிறம்: பச்சை, மஞ்சள்

பரிகாரம்
● சனிக்கிழமை பெருமாளுக்கு  அர்ச்சனை
● வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
● பவுர்ணமியன்று அம்மனுக்கு பாலாபிஷேகம்

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018) »
temple
தர்மவழியில் வாழ்வு நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், ராகு மாதம் ... மேலும்
 
temple
சகோதர பாசம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க ... மேலும்
 
temple
வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கடக  ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 2ல் இடம் மாறினாலும் மாதம் ... மேலும்
 
temple
சந்ததிக்கும் புண்ணியம் தேடும் சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.