Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - கையில் பணப்புழக்கம் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - உறவினரால் உதவி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - எதிர்பாராத பணவரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
15:23

தன்னலம் கருதாத தனுசு ராசி அன்பர்களே!

இந்த மாதம் குதூகலம் அதிகரிக்கும். காரணம், சூரியன் சாதக இடமான கன்னி ராசிக்கு வருகிறார். மேலும் புதன் செப்.,22க்கு பிறகும், சுக்கிரன்  அக்., 10 வரையும் நன்மை தருவர். இதனால் மந்தநிலை மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். வெளியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு  பலமாக இருப்பதால் எண்ணிய காரியம் இனிதே நிறைவேறும். பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு சாதகமான திசையில் இருந்து காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படைக்கலாம்.

செப்., 27,28,29ல் பல்வேறு நன்மைகளை பெறலாம். செப்., 22க்கு பிறகு எதிர்பாராத பணவரவு இருக்கும். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சச்சரவுகள் அடியோடு மறையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர்.  செப்., 23,24ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்., 5,6ல் உற்றார், உறவினர் வகையில் வீண் பிரச்னைகள்
வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, கவலை முதலியன மறையும். சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.  அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். திறமைக்கு தகுந்த மரியாதை கிடைக்கும். பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செப்., 20,21,22ல் ஊக்கத்தொகை, நினைத்த இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். அக்., 7,8ல்  மன உளைச்சல் ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைகள் விலகும். கூடுதல் வளர்ச்சி காணலாம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள், அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். அதன் பிறகு உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். வெளியூர் பயணம் ஏற்படும். பெண்களை பங்கு தாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும்.

அக்.9,10ல் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும்
வல்லமை பெறுவீர்கள். செப்.25,26,30ல் கல்லாப்பெட்டி மீது உங்கள் கண் இருப்பது நல்லது.

கலைஞர்கள் புகழும், பாராட்டும் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
சிலருக்கு விருது கிடைக்கலாம். அக்., 10க்கு பிறகு எதிரிகள் வகையில் தொல்லை
அதிகரிக்கும்.  போட்டி அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம்.

அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம்.

மாணவர்கள் கல்வியில் நல்ல வளம் காண்பர்.  ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.
செப்., 22 வரை சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை. யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். அதன்பின் அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் சிறந்து விளங்குவீர்கள்.

விவசாயிகளுக்கு சீரான பலன் கிடைக்கும். விளைச்சல் சுமாராக இருந்தாலும்
உழைப்புக்கு தகுந்த வருமானம் இருக்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானத்தை காணமுடியாது. புதிய சொத்து வாங்க சில காலம்
பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்      
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். அக்., 2,3,4ந் தேதிகளில் புத்தாடை, நகை வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். பணவரவு நன்றாக இருக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அக்டோபர் 11,12ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். சமையலறையில் கவனமாக இருக்க வேண்டும்.

நல்ல நாள்: செப்.20, 21, 22, 23, 24, 27, 28, 29 அக். 2, 3, 4, 9, 10, 11, 12
கவன நாள்: செப்.17, அக். 13,14  சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3    
நிறம்: செந்துரம், மஞ்சள்

பரிகாரம்
● வெள்ளியன்று லட்சுமிக்கு நெய் தீபம்
● ராகு கால பைரவர் பூஜையில் பங்கேற்றல்
● புதன்கிழமையன்று அன்னதானம்.

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018) »
temple
தர்மவழியில் வாழ்வு நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், ராகு மாதம் ... மேலும்
 
temple
சகோதர பாசம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க ... மேலும்
 
temple
வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கடக  ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 2ல் இடம் மாறினாலும் மாதம் ... மேலும்
 
temple
சந்ததிக்கும் புண்ணியம் தேடும் சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.