Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - எதிர்பாராத பணவரவு தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - ஆடம்பர வசதி கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - உறவினரால் உதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2017
15:25

பிறர் நலனில் அக்கறை மிக்க மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன்,சனி தொடர்ந்து நன்மை தருவர். புதன் செப்.22 வரையும், அக்.9க்கு பிறகும் நற்பலன் அளிப்பார். தடைகள் குறுக்கிட்டாலும் தீவிர முயற்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கத்தில் குறை இருக்காது. சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சமூக மதிப்பு சுமாராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் ஆடம்பர வசதி பெருகும். தேவை அனைத்தும் தாராள செலவில் நிறைவேறும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை உண்டாகும். அக்.9க்கு பிறகு பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன்,பொருள் சேரும். அக்.13,14ல் அவர்களிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். செப்.25,26ல் உறவினர்கள்
வருகையும்அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

நண்பர்களிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். அந்தஸ்து மிக்க மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். அக்.7,8ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். உஷ்ண, பித்தம், மயக்கம்,  சளி போன்ற உபாதைகள் வரலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.

தொழில், வியாபாரம் வளர்ச்சிமுகமாக அமையும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால், எதிரி தொல்லைகளுக்கு ஆளாகி செப்.2ல் இருந்து அக்.8 வரை சிலர் பண இழப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். சற்று கவனமுடன் இருக்கவும். அதன் பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.

வருமானம் உயரும். அக். 11,12 ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். செப்.27,28,29,
அக்.2,3,4ல் மதிப்பு, மரியாதை எதிர் பார்த்தபடி இருக்காது.

பணியாளர்கள் வாழ்வில் மேன்மை காண்பர். அதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு தானாக வந்து சேரும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். செப். 22 ல் இருந்து அக். 8 வரை நிர்வாகத்தினரின் பொல்லாப்புக்கு ஆளாகலாம். வேலையில் சற்று பொறுமை தேவை. அதன் பிறகு சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். செப்.23,24ல் சிறப்பான பலனடைவர்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அக். 9,10 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். செப்.22 ல் இருந்து அக்.8 வரை விடாமுயற்சி தேவைப்படும். யாரிடமும் அனாவசியமாக நெருங்கி பழக வேண்டாம்.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறையிருக்காது. கால்நடை வளர்ப்பின் மூலமும் ஆதாயம் காணலாம். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்கள் மனதில் சந்தோஷம் குடியிருக்கும். பொன்,பொருள் சேரும். தோழிகள் உறுதுணையாக செயல்படுவர். குடும்பத்தாரின் அன்பு கிடைக்க பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அக்.5,6ல் ஆடை, அணிகலன்கள் வாங்குவர். செப்.30, அக்.1ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். அண்டைவீட்டார் அனுகூலமாக இருப்பர். அக்.9க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

நல்ல நாள்: செப். 13, 14, 23, 24, 25, 26, 30, அக். 1, 5, 6, 11, 12, 17
கவன நாள்: செப்.18, 19 அக்.5, 16, 17 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4, 6      
நிறம்: வெள்ளை, கருப்பு

பரிகாரம்
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● ஞாயிறு ராகு காலத்தில் பைரவருக்கு நெய்தீபம்
● வெள்ளியன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2018 – 16.8.2018) »
temple
தர்மவழியில் வாழ்வு நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் முன்னேற்றத்தை கொடுப்பார். ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயல்பட்டு முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், ராகு மாதம் ... மேலும்
 
temple
சகோதர பாசம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் முன்னேற்றம் அளிக்க ... மேலும்
 
temple
வசீகர பேச்சால் பிறரைக் கவரும் கடக  ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஆக. 2ல் இடம் மாறினாலும் மாதம் ... மேலும்
 
temple
சந்ததிக்கும் புண்ணியம் தேடும் சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.