கீழ்நல்லாத்துார் : கீழ்நல்லாத்துார் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், நாளை சுதர்சன ஹோமம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துார் இந்திரா நகரில் அமைந்துள்ளது ஸ்ரீநிவாச பெருமாள் கோவில். இங்கு, சுதர்சன ஹோமம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நாளை நடைபெறுகிறது.காலை, 7:00 மணிக்கு சுதர்சன ஹோமமும், 9:00 மணிக்கு திருமஞ்சனமும், 10:00 மணி முதல் 12:00 மணிக்குள் ஸ்ரீநிவாச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.அதன்பின், மாலை 4:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் வீதிஉலா நடைபெறும்.