வாடிப்பட்டி, மதுரை பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டினர். முக்கிய நிகழ்வாக அக்.,17ல் அம்மன் அக்னிசட்டி புறப்பாடு, அக்.,18ல் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு மற்றும் பால்குடம் நிகழ்ச்சியும் நடக்கிறது.