Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி ரிஷபம்: பயணத்தால் இனிய அனுபவம் ரிஷபம்: பயணத்தால் இனிய அனுபவம்
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2017- 15.12.2017)
மேஷம்: சுபநிகழ்ச்சி நடந்தேறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:45

நல்லவர் கருத்தை மதிக்கும் மேஷ ராசி அன்பர்களே!

செவ்வாயால் மாத முற்பகுதியில் நன்மை மேலோங்கும். நவ.28-ல் சுக்கிரன் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன், குரு மாதம் முழுவதும் நற்பலன் தர காத்திருக்கின்றனர்.  உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-, ஆபரணங்கள் வாங்கும் யோகமுண்டாகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த பிரச்னையையும் சாதுர்யமாக எதிர் கொள்ளும் சாமர்த்தியம் பெறுவீர்கள்.

சமூகத்தில் செல்வாக்கு மேம்படும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும்.  திட்டமிட்டபடி வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தி மகிழ்வீர்கள். புதிய வீடு, -மனை, வாகனம் டிச. 2க்குள் வாங்க வாய்ப்புண்டு.  

கடந்த மாதம் குடும்பத்தில் பிரச்னைகள் நிகழ்ந்திருக்கலாம். கணவன்,- மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்க கூடும். இதற்கு காரணம் புதன் 7-ம் இடத்தில் இருப்பதே. இந்த மாதம் 8-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில்  அமைதி  நிலைக்கும்.  தம்பதியினர் கருத்து வேறுபாடு நீங்கி ஒன்றுபடுவர். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை உண்டாகும்.  புதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். டிச.1,2ல் பெண்கள் மூலம்  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவ.26,27-ல் உறவினர்கள் வருகையும்,  அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால்  டிச.7,8ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் டிச. 2-க்கு பிறகு வீண் அலைச்சல் ஏற்படும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. உடல்நலம் சீராக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வருமானத்தை காணலாம். அரசு வகையில் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க வேண்டாம். டிச.11,12,13-ல் திடீர் பண வரவுக்கு வாய்ப்புண்டு.

பணியாளர்கள் பணியில் நல்ல வளர்ச்சி காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு.  பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மாத முற்பகுதியில் சுக்கிரன் திருப்தியற்ற நிலையில் இருப்பதால், சக பெண் ஊழியர்களிடம் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதன் பின் நிலைமை சீராகும். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும்.  

கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு நவ.27-க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தம் கையெ ழுத்தாகும். அரசியல்வாதிகள், பொது நலசேவகர்கள் சிறப்பான பலன் பெறுவர். கடந்த கால உழைப்பின் பயன்  தற்போது வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான நிலை பெறுவர். போட்டி, பந்தயங்களில்  பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். டிச.1-க்கு பிறகு நட்பு விஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு கீரை, காய்கறிகள், பயறு, நெல், கோதுமை போன்றவை நல்ல மகசூலை கொடுக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் டிச.2க்குள் கைகூடும். வழக்கு விவகாரத்தில் முடிவு திருப்திகரமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பர். குடும்ப பிரச்னையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர்.  கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். டிச.5,6-ல் புத்தாடை,  அணிகலன்கள் வாங்கலாம்.
நவ. 24,25 ல் எதிர்பாராத நன்மை நடக்கும்.

* நல்ல நாள்: நவ.17, 18, 24, 25, 26, 27,
டிச. 1, 2, 5, 6, 11, 12, 13, 14, 15

* கவன நாள்: நவ.19, 20- சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7   நிறம்: பச்சை, மஞ்சள்

* பரிகாரம்:
* வெள்ளியன்று லட்சுமிக்கு அர்ச்சனை
* சனியன்று  சனீஸ்வரருக்கு எள் விளக்கு
* கார்த்திகையன்று முருகனுக்கு பாலாபிேஷகம்.

 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2017- 15.12.2017) »
temple
வெற்றி மனப்பான்மையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய் டிச.2ல் இருந்து நற்பலன் தர ... மேலும்
 
temple
நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் நவ.28க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற ... மேலும்
 
temple
அனைவரிடமும் அன்பு காட்டும் கடக ராசி அன்பர்களே!

புதன்  இந்த மாதம் சாதகமான இடத்திற்கு வருகிறார். ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரனின் நற்பலன்கள் மாதம் முழுவதும் தொடரும். ... மேலும்
 
temple
கண்ணியத்துடன் நடக்க விரும்பும் கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன் நவ.27ல் இடம் மாறினாலும் மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.