Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: வளர்ச்சிக்கான மாதம் கன்னி: வளர்ச்சிக்கான மாதம் விருச்சிகம்: திடீர் வருமானம் வருதுங்க! விருச்சிகம்: திடீர் வருமானம் ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
துலாம்: அரசு வகையில் நன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:54

தூய்மையின் அடையாளமாகத் திகழும் துலாம் ராசி அன்பர்களே!

சுக்கிரன் மட்டும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது இருக்கும். ஆனால், குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளதால் பிற்போக்கான நிலை ஏதும் உண்டாகாது.

சுக்கிரனால் மாத முற்பகுதியில் பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். நவ.27 க்கு பிறகு பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசாங்க வகையில் நன்மை ஏற்படும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்க, பெண்கள் வசம் பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லது.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். நவ.17,18, டிச.14,15ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல் படுவர். நவ. 24,25ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால், டிச.9,10ல் உறவினர் வருகையும் அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் மேம்படும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். கண் தொடர்பான நோய்கள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் நிறுவனம் வளர்ச்சி அடையும். நவ.27க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசாங்க வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியை மேற்கொள்வீர்கள்.  நவ.19,20, டிச.11,12,13 ல் சந்திரனால் தடைகள் வரலாம். நவ.28,29,30 ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியது இருக்கும். மற்றவர் உதவியை நாடாமல் தன் கையே தனக்கு உதவி என உழைக்கும் சூழ்நிலை உருவாகும். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே எதிர்பார்க்கும் கோரிக்கைகள் நிறைவேறும். மாத முற்பகுதியில் சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். டிச.7,8ல் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம்.

நவ. 27க்கு பிறகு அரசு ஊழியர்கள் பணியில் முன்னேற்றம் காணலாம். எதிர்பார்த்த
கடனுதவி  கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவீர்கள்.

நவ.27க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.

மாணவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த மந்த நிலை மாறும். ஆசிரியர்களின் அறிவுரை  வளர்ச்சிக்கு கைகொடுக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின் பார்வையால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம். அதிக முதலீடு செய்யும் பணப்பயிர்களைத்
தவிர்ப்பது நல்லது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடாமல் தள்ளிப்போகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் நன்மதிப்பை பெற்று வாழ்வில் குதூகம் அடைவர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் நடந்து கொள்வர். தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை.

* நல்ல நாள்: நவ.17,18,21,22,23,28,29,30, டிச.1,2,7,8,9,10,14,15
* கவன நாள்:  டிச.3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:  4,8 நிறம்: வெள்ளை, மஞ்சள்

* பரிகாரம்:
* சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
* ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
* ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.