Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: திடீர் வருமானம் வருதுங்க! விருச்சிகம்: திடீர் வருமானம் ... மகரம்: வீடு கட்டும் யோகம் மகரம்: வீடு கட்டும் யோகம்
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
தனுசு: வளர்ச்சிக்கு வழியிருக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:56

தன்னம்பிக்கையுடன் செயலாற்றிடும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் நவ.27ல் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை. காரணம் செவ்வாய்  டிச.2 ல் இருந்து நன்மை செய்ய காத்திருக்கிறார். குரு பலத்தால் வாழ்வில் சீரான வளர்ச்சி உண்டாகும்.

குடும்பத்தில் பணவரவுக்கு குறைவிருக்காது. சொந்தபந்தங்களின் வருகை அடிக்கடி இருக்கும். குரு பகவான் சிறப்பான இடத்தில் உள்ளதால், டிச.1க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மாத பிற்பகுதியில் உறவினர் வகையில் அனுகூலம் இருக்காது. குறிப்பாக நவ.28,29,30ல் அவர்கள் வகையில் வீண் பிரச்னைக்கு ஆளாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.17,18, டிச.14,15ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். நவ.21,22,23ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அலைச்சல், பகைவர் தொல்லையை சந்திக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு பொருள் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு.  வெளியூர் பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. அறிவைப் பயன்படுத்தி வருமானத்தை தக்க வைக்க முயற்சிக்கவும். புதிய வியாபார முயற்சி இப்போதைக்கு வேண்டாம். இருப்பதை திறமையாக நடத்தினால் போதுமானது.  டிச.1க்கு பிறகு நிலைமை சீராகும். வருமானம் படிப்படியாக உயரும்.

பணியாளர்கள்  திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர்.  வேலைப் பளுவும்  அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப்  போவது நல்லது. முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். டிச.1க்குப் பிறகு உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் கூட, தங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  மாத பிற்பகுதியில் விடாமுயற்சி தேவைப்படும்.  உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு தட்டி பறிக்கப் படலாம்.  ஆனாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் வராது.  அரசியல்வாதிகள், பொது நலத்தொண்டர்கள் சீரான வளர்ச்சி காண்பர். எதிரிகள் வகையில் இருந்த தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன டிச.1க்கு பிறகு மறையும். அதன் பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவி கிடைக்கவும் யோகமுண்டு.

மாணவர்கள் கல்வியில் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் உண்டாகும். குரு சாதகமாக காணப்படுவதால் பின்தங்கிய நிலை உண்டாகாது.

விவசாயிகள் கரும்பு, எள், கீரை, காய்கறி வகைகளில் நல்ல மகசூலை காணலாம். கால்நடை  வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் டிச.1க்கு பிறகு நிறைவேறும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.  கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் சுக்கிரனின் பலத்தால் நவ.27 வரை குடும்பத்தில் நற்பெயர் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். சொந்த பந்தங்கள் அனுசரணையுடன் இருப்பர்.

டிச.5,6ல் உற்சாகமான மனநிலையுடன் செயல்படுவீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். நவ.26,27ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். சிலருக்கு ராகுவால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்பட வாய்ப்புண்டு. ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.

உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். டிச. 1க்கு பிறகு நிலைமை சீராகும்.  

* நல்ல நாள்: நவ.17,18,21,22,23,26,27, டிச.3,4,5,6,11,12,13,14,15
* கவன நாள்: டிச.7,8 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: மஞ்சள், வெள்ளை

* பரிகாரம்:
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
* சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.