Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தனுசு: வளர்ச்சிக்கு வழியிருக்கு தனுசு: வளர்ச்சிக்கு வழியிருக்கு கும்பம்: லாபம் அள்ளுவீங்க! கும்பம்: லாபம் அள்ளுவீங்க!
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
மகரம்: வீடு கட்டும் யோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:57

மனதில் பட்டதை வெளிப்படுத்தும் மகர ராசி அன்பர்களே!

புதனால் கடந்த காலத்தில்  கிடைத்த நற்பலன்கள் இந்த மாதமும் தொடரும். சுக்கிரன் நவ. 27க்கு பிறகு சாதக பலனை கொடுப்பார். சூரியன், சனீஸ்வரர் சாதக பலனை கொடுப்பர். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் தீமை உண்டாகாது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். புதனால் புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிரிகளின் இடையூறை எளிதில் முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் சிறக்கும்.  தொழிலில் லாபம் அதிகரிக்கும்..

குடும்பத்தில் முன்னேற்றமான சூழ்நிலை அமைந்திருக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி மனதில் நிலைத்திருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக செயல்படுவர். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.  நவ.27க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். நவ.19,20 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.1,2ல் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு  வர வாய்ப்புண்டு. அவர்களிடம்  சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.24,25ல் எதிர்பார்ப்பு நிறைவேற இடமுண்டு. சிலருக்கு  மனை வாங்க அல்லது வீடு கட்டும் யோகம் உண்டாகும். டிச.1க்கு பிறகு  சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. அண்டை வீட்டார்களின் தொல்லை ஏற்படும்.

உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். டிச.1க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.  பயணத்தின் போது கவனம் தேவை.  டிசம்பர் 3,4,11,12,13
மனக்குழப்பம் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும்.  வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.  விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். டிச.1க்கு பிறகு எதிரிகளால் தொல்லை வரலாம். டிச.5,6ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். நவ.21,22,23,26,27ல் சந்திரனால் சிறு  தடைகள் குறுக்கிடலாம். பணியாளர்கள் சீரான வளர்ச்சி அடைவர்.  அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். டிச.1 க்கு பிறகு சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றமான பலனை பெறுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு  தடையிருக்காது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். நவ.17,18,டிசம்பர் 14,15ல் எதிர்பாராத நன்மை  கிடைக்கும். கலைஞர்கள் மறைமுகப்போட்டியில் சிரமத்திற்கு ஆளாவர்.  சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம். எதிலும் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிரிகள் வகையில் இருந்த தொல்லை நவ.27க்கு பிறகு மறையும். மாத பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள் புதன் சாதகமாக காணப்படுவதால்  நற்பலனை காணலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு  உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போகலாம். அதிக முதலீடு செய்யும் பணப் பயிர்களைத் தவிர்க்கவும்.  கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை காணலாம்.  

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். நவ.28,29,30ல்
புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: நவ.17,18,19,20,24,25,28,29,30, டிச.5,6,7,8,14,15
* கவன நாள்: டிச.9,10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
* ராகு காலத்தில் பைரவருக்கு நெய் தீபம்
* செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.