Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராயக்கோட்டையில் பாறை ஓவியங்கள் ... மதுரை மீனாட்சி கோவிலில் விளக்கு ஏற்றி முதல்வர் பழனிசாமி தரிசனம் மதுரை மீனாட்சி கோவிலில் விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடியில் நடைசாத்தும் அம்மன் கோயில்
எழுத்தின் அளவு:
ஆடியில் நடைசாத்தும் அம்மன் கோயில்

பதிவு செய்த நாள்

18 நவ
2017
11:11

சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ். தரைக்குடியில் பழமை வாய்ந்த உமைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. நிழல்தரும் மரங்கள் கோயிலை சுற்றி பூஞ்சோலையாக உள்ளது. இரண்டு புறமும் 22 அடி உயரமுள்ள முனீஸ்வரர் காவல் தெய்வமாக கம்பீரமாக காட்சி தருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் நாள் கோயில் நடைசாத்தப்பட்டு, ஆவணி முதல் தேதியன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனின் முதல் நாள் பார்வை, காட்சிதரும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. பொதுவாக எல்லா அம்மன் கோயில்களிலும் ஆடி முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கூழ் காய்ச்சியும், பொங்கல் வைத்தும் வழிபாடு செய்வர். இக்கோயிலில் மட்டும் இதற்கு விதிவிலக்காக நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். மூலவரான உமையநாகிய அம்மன் சன்னதியில் மேற்கூரை எதுவும் கிடையாது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பொன்னு பெருமாள் கூறுகையில், ஆடி மாதம் முழுவதும் அம்மன் இங்கிருந்து, நடைபயணமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று, அங்குள்ள அக்னிதீர்த்தக்கடலில் தீர்த்தமாடி விட்டு ஆவணி முதல் தேதியன்று மீண்டும் கோயிலுக்கு திரும்பி வருவதாக ஐதீகம். இதுபோன்ற நடைமுறை காலந்தொட்டு பின்பற்றப்படுகிறது. குலதெய்வமாக கொண்ட வெளியூரில் உள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் முதல்நாள் பார்வை நிகழ்ச்சியில் பங்கேற்க வருகின்றனர். ஆவணி கடைசி புதன்கிழமையன்று வடமாடு எருதுகட்டு விழா நடக்கும், என்றார்.
தொடர்புக்கு: 99436 22494.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar