புதுச்சேரி: கோவிந்த சாலையில் அய்யப்ப சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கோவிந்த சாலை, கருணாநிதி வீதியில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில், 7 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி இன்று (21ம் தேதி) காலை 11 மணிக்கு உற்சவ பலியும், வரும் 24ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி ஊர்வலமாக வேட்டைக்கு செல்லும் பள்ளிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை 9.30 மணிக்கு காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை 9.30 மணிக்கு 108 கலசாபிஷேகம், சந்தன அஷேகமும், இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப அஷேகமும் நடக்கிறது.