தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் நவகிரகங்கள் அமைந்துள்ள பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்பணம் , குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைத்து வருவதாக பக்தர்கள் நம்புவதால் வெளி மாநில பக்தர்களும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.