Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமைதி காத்தால் ஆனந்தம் கார்த்திகை சோமவாரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பார்வை தந்த அங்கயற்கண்ணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
03:12

துரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அவரின் அவையில் பல கல்வியாளர்கள் இருந்தனர். அதில் ஒருவரான நீலகண்ட தீட்சிதர் சிறந்த அருளாளர். தீட்சிதர் மீது மன்னருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. ஒருசமயம், அங்கயற்கண்ணி மீனாட்சி கோயில் அருகில் வசந்தமண்டபம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது.  பட்டத்து ராணியின் சிலையை புதுமண்டபத்தில் அமைக்க மன்னர் உத்தரவிட்டார். சிற்பி சிலை செய்த போது, உளி பட்டு தொடைப்பகுதியில் ஒரு சில்லு தெறித்து விழுந்தது. பின்னமான, சிலையை ஒதுக்கி விட்டு சிற்பி மீண்டும் கல்லெடுத்து சிலை செதுக்கினார். மீண்டும் தொடைக்குக் கீழே உளி பட்டு சில்லு போனது. மன்னரின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமே என அஞ்சினார் சிற்பி. அந்த சமயத்தில் நீலகண்ட தீட்சிதர், மண்டப பணிகளை மேற்பார்வையிட அங்கு வந்தார்.  கவலையுடன் இருந்த சிற்பியிடம், ஏனப்பா உன் முகம் வாடியிருக்கிறது? என்று கேட்டார். ராணியின் சிலையைக் காட்டி பிரச்னையைச் சொன்னார் சிற்பி. இருமுறை முயன்றும் சரிவராத சிலையை தீட்சிதர் உற்றுப்பார்த்தார். அவரின் தெய்வீக கண்களுக்கு உண்மை புரிந்தது. அவர் சிற்பியிடம், சிற்பம் வடிப்பது தெய்வீகக்கலை. உன் கையில் இருக்கும் உளி சாதாரணமானதல்ல. உண்மையைத் தான் சிற்பம் காட்டுகிறது.

வருந்தாதே! என்று சொல்லி புறப்பட்டார். மறுநாள் புதுமண்டபம் வந்த மன்னர் ராணியின் சிலையைக் கண்டார். தொடையில் சில்லு விழுந்திருப்பதைக் கண்டு சிற்பியிடம் விசாரித்தார். ஒருமுறைக்கு இருமுறை முயற்சித்ததையும், தீட்சிதர் கூறிய விளக்கத்தையும் மன்னரிடம் எடுத்துச் சொன்னார்.  ராணியின் தொடையில் இருக்கும் குறை தீட்சிதருக்கு எப்படி தெரிந்தது? என்று மன்னருக்கு சந்தேகம் தீயாகப் பற்றி எரிந்தது. தன் மனைவியை அவர் ரசித்திருப்பாரோ என்று பதைபதைத்தார். தீட்சிதரின் கண்களைப் பொசுக்க வேண்டும் என்று மனம் கொந்தளித்தது.  தீட்சிதரை அழைத்து வர, உடனே ஆள் அனுப்பினார். அப்போது தீட்சிதர் வீட்டில் இருந்த மீனாட்சியம்மன் சிலைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் மன்னர் தன்னை அழைத்திருக்கும் விபரீத காரணத்தை உணர்ந்தார் தீட்சிதர். அப்படியே கற்பூர ஜோதியை கண்களில் அப்பிக் கொண்டார். கண்கள் தீயில் வெந்து புண்ணானது. தான் நினைத்ததை, தீட்சிதரே நிறைவேற்றிக் கொண்ட செய்தி மன்னரை எட்டியது. தீட்சிதரின் தெய்வீகத் தன்மையை உணராமல் பெரும் பழி செய்து விட்டோமே என்று கலங்கினார். அவரிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர், நீலகண்ட தீட்சிதர் மீனாட்சியம்மன் மீது ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் ஸ்லோகம்பாடினார். அன்னையின் அருளால் தீட்சிதரின் கண்கள் மீண்டும் பார்வை பெற்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar