Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் குழந்தைகள் ... சுயம்புவாக சனீஸ்வர பகவான் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவில் சொத்துக்கள் வாயிலாக ரூ.838 கோடி வருவாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
01:12

சென்னை: கோவில் சொத்துக்கள் வாயிலாக, ஆறு ஆண்டுகளில், 838 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சொத்துக்களை பாதுகாக்க, பிற துறைகளின் ஒத்துழைப்பு தேவை என, அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக கோவில்களின் சொத்துக்கள் தொடர்பாக, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 685 கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, 4.80 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. சொத்துக்களை பெருக்கும் வகையில், 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள், 33 ஆயிரத்து, 665 மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள், 1.23 லட்சம் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதன்படி, ஆறு ஆண்டுகளில், கோவில்களுக்கு, 838 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. கோவில்களின் விவசாய நிலங்கள், வாடகை நிலுவை தொடர்பான வழக்குகளை முடிக்க, 1961 முதல், தனி ஆட்சியர் தலைமையில், தமிழகத்தில், 10 இடங்களில், வருவாய் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வாயிலாக, 9,629 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தனியாரின் பிடியில் இருந்த, 5,559 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, மீண்டும் கோவில் பெயரில், பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2,887 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், மனை, கட்டடங்கள் மீட்கப் பட்டுள்ளன. அறநிலையத் துறையின் முயற்சிகளுக்கு, வருவாய், சுற்றுலா, காவல் துறை உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் தான், கோவில் சொத்துக்களை முழுமையாக பாதுகாக்க முடியும். இவ்வாறு அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
போடி; ராம நவமியை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் லட்சுமணர், சீதையுடன், ராமருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருமலை ஸ்ரீவாரி கோயிலில் புதன்கிழமை ஸ்ரீராமநவமி ஆஸ்தானத்தை முன்னிட்டு ஸ்ரீ சீதாராம லட்சுமணருடன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே திருமண வரம் தரும் திருமணஞ்சேரி உத்வாகநாதர்  சுவாமி ஆலயத்தில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கைகாட்டி புதூர் அம்பேத்கர் வீதியில் 13 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar