Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை): பிரச்னை இருந்தாலும் தெய்வ பலமும் இருக்குது! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்:  (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2): சுற்றி வளைத்து தாக்கினாலும் அதிலும் சுகம் இருக்குது! மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2018
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1): தடுமாற்றம் வந்தாலும் தன்னம்பிக்கை காப்பாற்றும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2018
11:56

தன்னலம் கருதாத தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ஆட்சி நாயகன் குரு ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. இது சிறப்பான இடம். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின் 7, 9-ம் இட பார்வைகள் சிறப்பாக உள்ளன. அதன் மூலமும் நன்மைகள் பெறலாம். அவர் பிப்.14- முதல் ஏப்.8 வரை 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறிய பின், பலன்கள் குறையும். ஏப்.9-முதல் செப்.3- வரை வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறியதும் மீண்டும் நன்மைகள் கிடைக்கும்.

உங்களுக்கு ஏழரை சனியின் உச்சக்கட்டம். உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும். சனியின் 3-ம் இட பார்வை மட்டும் ஓரளவு நல்லதைத் தரும். ராகு 8-ம் இடமான கடகத்தில் இருப்பதும் சிறப்பல்ல. அவர் முயற்சிகளில் தடைகளை உருவாக்கலாம். கேதுவும் 2-ம் இடமான மகரத்தில் இருப்பதால் நன்மை தர இயலாது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். குரு சாதகமாக உள்ள நிலையில், செலவுகள் அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும்.

பிப்ரவரி 13-ந் தேதிக்கு பிறகு ஏப்ரல் 8 வரை மிக கவனமாக இருங்கள். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை குரு,சனி வக்கிரம் அடைவதால் பிரச்னைகள் குறையும். வாழ்விலும் தடுமாற்றம் குறுக்கிட்டாலும் தன்னம்பிக்கை இழக்காமல் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். திருமணம், சுப நிகழ்ச்சிகள் தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். சிலரிடம் விரோதம் வர வாய்ப்பு உண்டு. யாரிடமும் எச்சரிக்கைஉடன் பேசவும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமல் போகலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.

வெளியூர் பயணம் சிறப்பை தரும். ஆகஸ்டிற்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். பணியாளர்கள் பிப்ரவரிக்குள் தங்கள் சலுகை, பதவி உயர்வு போன்றவற்றுக்கு முயற்சிக்கலாம். அதன்பின் வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். சிலர் பொறுப்புகளை இழக்க நேரிடலாம். கவனம். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வேலையில் இருந்த கெடுபிடி குறையும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சம்பள, பதவி உயர்வு கிடைக்கும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மீண்டும் கெடுபிடியில் சிக்குவீர்கள். சிலர், வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டி வரும்.

கலைஞர்கள் முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் ஸ்திர நிலையை பெறுவர். பதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள்.  போட்டிகள் நிலவும். மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும். முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகள் சுமாரான மகசூல் காண்பர். வழக்கு, விவகாரங்கள் பாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. சொத்து வாங்குவதற்கான அனுகூலம் குறைவு. பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக உள்ளவர்களுக்கு மட்டும், குருவால் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதியினர் ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் அடைவர்.

பரிகாரம்:
* நவக்கிரகங்களை வலம் வரவும்.
* சனி பகவானுக்கு எள் சோறு படைத்தல்.
* முதியோர் இல்லத்துக்கு உதவுதல். செல்ல வேண்டிய தலம் சிவகங்கை மாவட்டம்
மடப்புரம் பத்ரகாளி கோயில்

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2018 »
temple
அன்புள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

புத்தாண்டில் நீங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேற்றம் ... மேலும்
 
temple
தடுமாற்றம் இருந்தாலும் தாங்கிப் பிடிக்க ஆட்கள் உண்டு

உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் எட்டாம் ... மேலும்
 
temple
கடவுளின் செல்லப்பிள்ளைகளான மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசி நாயகன், புதன் சாதகமாக இருக்கும் ... மேலும்
 
temple
கல்லைக் கனியாக்கும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு ... மேலும்
 
temple
வெற்றிக்கனிக்காக போராடும் சிம்ம ராசி அன்பர்களே!

தற்போது 6-ம் இடத்தில் உள்ள கேது  நன்மை தந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.