Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆருத்ரா உற்சவ விழா காஞ்சியில் ... விருதுநகர் மாவட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம் விருதுநகர் மாவட்ட கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
12:01

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் உட்பட சிவாலயங்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. ரோஜா, முல்லை, மல்லிகை, அரளி மலர்களால் அபிேஷகம் நடந்தது. ஏராமான பக்தர்கள் வழிபட்டனர்.

பழநி: திருவாதிரை உற்ஸவ விழாவில், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனவிழாவை முன்னிட்டு, கடந்த டிச.24ல் சாயரட்சை பூஜைக்குபின் பெரியநாயகியம்மன், சிவன், மாணிக்கவாசகருக்கு, நடராஜருக்கு காப்புகட்டுதல் நடந்தது. அதன்பின் அம்மன், மாணிக்கவாசகர் எதிரே வைத்து ஓதுவார்கள் திருவெம்பாவை பாடியபின்னர் சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு ஆருத்ரா அபிஷேகம், அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு நடராஜர் ஹோமம், ஆராதனையும் நடந்தது. நடராஜர், சிவகாமியம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சுவாமிகள், நான்குரத வீதிகளில் உலா வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமியம்மன் அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்தனர்.

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் அதிகாலையில் கணபதி ேஹாமம் மற்றும் கும்ப பூஜை நடந்தது. தொடர்ந்து பால், இளநீர், பன்னீர், சந்தனம், தயிர், விபூதி, தேன், புஷ்பம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வயைாகயான அபிேஷகங்கள் நடந்தது. இதையடுத்து கோ பூஜை நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சிவகாமி அம்மன் மற்றும் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, சுவாமி, மூலவர், நந்திக்கு, பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 30 வகை விசேஷ அபிேஷகங்கள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன், மகா தீபாராதனை நடந்தது. விழாவில், ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிதிருமூல நாதர் கோயில், சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், ஆருத்ரா தரிசன சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.

வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. சுந்தரேசுவரர், சிவபெருமாள், நடராஜருக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளை அர்ச்சகர்கள் ஐயப்பன், நாராயணன் செய்தனர். ஏற்பாட்டினை தக்கார் கணபதிமுருகன், செயல் அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar