Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி 20ம் நாள் வழிபாடு வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி ... திம்மராயப்பெருமாள் கோவிலில் மார்கழி 23ம் நாள் வழிபாடு திம்மராயப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப நாளை மார்கழி 21ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
13:08

பெ.நா.பாளையம்: இடிகரை அருகே உள்ள கோவிந்தநாயக்கன்பாளையம் கோதண்டராமஸ்வாமி கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப… என தொடங்கும், திருப்பாவையின் 21ம் பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.இடிகரை அருகே கோவிந்தநாயக்கன்பாளையத்தில், கோதண்டராமஸ்வாமி கோவில் உள்ளது. அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி இடிகரையில் உள்ள, வில்லீஸ்வரரை வழிபட்டு, கோவிந்தநாயக்கன்பாளையத்தில் அவருடைய பாதங்கள் பட்ட பகுதி என்பதை உணர்ந்த முன்னோர், 1764ம் ஆண்டில் இங்கு சீதை, ராமர் லட்சுமண, ஆஞ்சநேயர் கோவிலை கட்டினர்.200 ஆண்டுகளாக பல்வேறு பூஜைகள், இக்கோவிலில் நடந்து வந்தன. 1938 முதல் 1969 வரை, இக்கோவில் சிதிலமடைந்து இருந்தது. ஊர்மக்கள் அளித்த நன்கொடைகள் வாயிலாக புதுப்பிக்கப்பட்டது. தற்போது, இக்கோவிலில் ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத பூஜைகள், புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள் நடந்து வருகின்றன.இங்குள்ள கோதண்டராமரை வழிபட்டால், குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கடுமையான உபாதைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

இக்கோவிலில் நாளை காலை 5:00 மணிக்கு, ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே... என்ற திருப்பாவையின், 21ம் பாடலை பக்தர்கள் பாடுகின்றனர். கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள், நிரம்பி வழியும் வகையில் பாலை சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட, பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! நீ எழுவாயாக! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உன்னை எதிர்த்தவர்கள் எல்லாம் வலிமை இழந்து, உன் பாதத்தில் காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக என்பதே இப்பாடலின் பொருள்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple
அன்னுார்: அன்னுார் அருகே வரதையம்பாளையத்தில், பழமையான வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் ... மேலும்
 
temple
சூலுார்:சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டி, ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, 28வது ... மேலும்
 
temple
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் உள்ள, கல்யாண வெங்கட்டரமண பெருமாள் ... மேலும்
 
temple
சூலுார்: சூலுார் அடுத்த கள்ளப்பாளையம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில், நாளை (௯ம் தேதி) அதிகாலை, 4:30 மணிக்கு, ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்:கா.புங்கம்பாளையத்தில் உள்ள திம்மராயப்பெருமாள் கோவிலில், நாளை மார்கழி, 23ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.