Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) திருமணம் நடக்கும் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2): அனுசரிப்பு தேவை ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » மார்கழி ராசிபலன் (16.12.2018 – 14.1.2019)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்): பணப்புழக்கம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
14:49

உதவும் குணமுள்ள மேஷ ராசி அன்பர்களே!

சூரியன் 10-ம் இடத்திற்கு வந்தும், குரு மாதம் முழுவதும், புதன் ஜன.22-ல் சாதகமான நிலைக்கு வந்தும், சுக்கிரன் பிப்.7-ல் 10ம் இடத்திற்கு சென்றும் பலன் தருவர். குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை நடத்துவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். புதன் ஜன.22-ல் 10-ம் இடத்திற்கு செல்வதால் பிரச்னைகள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். இது வரை இருந்து வந்த காரிய தடைகள் அடியோடு மறையும். தீயோர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை புரிந்து கொள்ளா தவர்கள், மனம் திருந்தி உங்களிடம் சரண் அடைவர். உறவுக்கார பெண்களால் பெரிதும் முன்னேற்றம் காண்பீர்கள்.

செவ்வாயால் இருந்து வந்த அலைச்சல், மனவேதனை,  மனைவி வகையில் இருந்த தொல்லை, அண்டை வீட்டார் பிரச்னை முதலியன ஜன.20க்கு பிறகு மறையும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும். ஜன.20,21-ல் உறவினர்களால் நன்மை கிடைக்கும் ஆனால் ஜன. 31, பிப்.1- அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பிப்.6,7-ல் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.7- முதல் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டில் மகிழ்ச்சியும் குதூகலமும் குடி கொண்டிருக்கும். வீட்டிற்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.  

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களின் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஜன. 22,23,26,27,28-ல், வரவு செலவை நீங்களே நேரடியாகக் கவனிக்கவும். பிப்.4,5-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.  பணியாளர்கள் குருவால்  உயர்ந்த நிலையை அடைவர். வேலையில் இருந்து வந்த அலைச்சல், வேலைப்பளு ஜன.21-க்கு பிறகு மறையும். பணியிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். அதிகாரிகளின் ஆதரவு, சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜன.17,18,19ல் எதிர்பாராத நற்பலன் கிட்டும்.எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், முயற்சிகளில் இருந்த தடை  முதலியன பிப்.6-க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தங்கள் பெற்று பொருளாதார வளத்தை காண்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். பிப்.2,3ம் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிறப்பான பலனை காண்பர். கெட்டவர்களோடு சேர்ந்து படிப்பை பாழாக்கியவர்கள் அதில் இருந்து விடுபடுவர். புதனின் அருளால் நல்ல மதிப்பெண்களும் பாராட்டும் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பர்.

ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். விவசாயிகள் கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக தள்ளி போடுங்கள்.

பெண்களுக்கு கணவன், குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  ஜன.24,25ல் எதிர்பாராத சலுகை பெறலாம். சகோதரிகளால் உதவி கிடைக்கும். ஜனவரி 29,30-ல் புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்: ஜன. 17,18,19,20,21,24,25,29,30 பிப். 4,5,6,7.
* கவன நாள்: ஜன.14, பிப்.8,9,10 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண் : 1,9 நிறம்: மஞ்சள், சிவப்பு

* பரிகாரம்:
● நவக்கிரகங்களில் ராகுவுக்கு அர்ச்சனை.
● செவ்வாயன்று துர்க்கைக்கு நெய் தீபம்.
● சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை.

 
மேலும் மார்கழி ராசிபலன் (16.12.2018 – 14.1.2019) »
temple
இந்தமாதம் முற்பகுதியில் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், ... மேலும்
 
temple
இந்த மாதம்  முக்கிய கிரகங்களில் 3-ல் இருக்கும் ராகு, 7-ல் இருக்கும் குரு சாதகமாக நின்று தொடர்ந்து நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச.29 வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து  நன்மை கொடுப்பார். ... மேலும்
 
temple
கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. சூரியன்  இந்த மாதம் தனுசுவிற்கு சென்று நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 6ல் இருக்கும் கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.  முயற்சிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.