Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்): பணப்புழக்கம் அதிகரிக்கும் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3): மாதம் முழுக்க நன்மை மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » மார்கழி ராசிபலன் (16.12.2018 – 14.1.2019)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2): அனுசரிப்பு தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
14:50

வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்.  நட்பு கிரகமான புதன் ஜனவரி 22-ந் தேதி வரையும், அதன்பின் பிப்.7-க்கு பிறகும், சுக்கிரன் பிப்.7- வரையும் சாதகமான இடத்தில் இருந்து நற்பலனை கொடுப்பர். செவ்வாய் ஜன.20- வரை நன்மை தருவார். சூரியன் 9-ம் இடத்தில்  இருப்பதால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். வீண் விவாதங்களை குறைத்து அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது.

செவ்வாயால் மாதத் தொடக்கத்தில் பணவரவு அதிகரிக்கும்.  உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-, ஆபரணங்கள் வாங்கலாம்.  புதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும்.  உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.  கணவன், -மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் பக்கத்து வீட்டாரின் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். பிப்.7- வரை கிரகநிலை சரியில்லாததால் பொருட்கள் திருட்டு போக வழியுண்டு. கவனமாக இருக்கவும். ஜன.26,27,28ல் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஜன.22,23-ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிப்.2,3ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் பிப்.7-க்கு பிறகு அதில் இருந்து விடுபடுவர்.

பணியாளர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தையும், சிலர் பொல்லாப்பையும்சந்திக்கலாம். பொறுமையுடன் அனுசரித்து போகவும். வேலையில் கவனமாக இருக்கவும்.  பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகளை ஜன.20க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். ஜன.20,21-ல் எதிர்பாராத சலுகை கிடைக்கும். சிலருக்கு வேண்டிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வுக்கான அறிகுறி இம்மாதம் இருக்கிறது.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுபடுத்தலாம்.  வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. போட்டியாளர்களை சமாளிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும், பிப்.6,7-ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.  ஜன.24,25,29,30-ல் உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். பணம் விரயம் ஆகலாம். இந்த நாட்களில் கல்லாப்பெட்டி உங்கள் பொறுப்பில் இருப்பது நல்லது.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாதக்கடைசியில் எதிரிகளால் தொல்லையும், போட்டியும் அதிகம் இருக்கும். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பிப்.4,5-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் மாத ஆரம்பத்தில் முன்னேற்றப் பாதையில் செல்வர். ஆசிரியர்களிடம் நற்பெயர் பெறுவர். பிற்பகுதியில் புதன் சாதகமற்ற நிலைக்கு செல்வதால், சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை. விவசாயிகள் சீரான மகசூல் பெறுவர். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். புதிய சொத்து ஜன.20-க்குள் வாங்கலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். பெண்கள் வளர்ச்சி அடைவர்.

* நல்ல நாள்: ஜன. 20,21,22,23,26,27,28,31 பிப். 1,6,7,8,9,10
* கவன நாள்:  ஜன.15,16,பிப். 11,12 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 7,8    நிறம்: வெள்ளை,  நீலம்

* பரிகாரம்:

● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்.
● நவக்கிரகங்களில் கேதுவுக்கு அர்ச்சனை.
● வெள்ளியன்று துர்க்கை வழிபாடு.

 
மேலும் மார்கழி ராசிபலன் (16.12.2018 – 14.1.2019) »
temple
இந்தமாதம் முற்பகுதியில் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், ... மேலும்
 
temple
இந்த மாதம்  முக்கிய கிரகங்களில் 3-ல் இருக்கும் ராகு, 7-ல் இருக்கும் குரு சாதகமாக நின்று தொடர்ந்து நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச.29 வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து  நன்மை கொடுப்பார். ... மேலும்
 
temple
கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. சூரியன்  இந்த மாதம் தனுசுவிற்கு சென்று நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 6ல் இருக்கும் கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.  முயற்சிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.