Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3): மாதம் முழுக்க நன்மை மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): யோகம் வந்தாச்சு! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): யோகம் ...
முதல் பக்கம் » மார்கழி ராசிபலன் (16.12.2018 – 14.1.2019)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்): திறமைக்கு சவால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
14:53

நேசமும் பாசமும் மிக்க கடக ராசி அன்பர்களே!

அதிக உழைப்பையும் விடா முயற்சியையும் கொடுக்க வேண்டிய மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் இது. சனிபகவானை தவிர மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளதால், எந்த செயலையும் அதிக முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியது இருக்கும். மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிக பலன்களை காணலாம். காரணம் புதன் ஜன.21- வரையும், பிப்.7-க்கு பிறகும் நன்மைகளை கொடுப்பார். சுக்கிரன் பிப்.7-ல் இடம் மாறி நன்மைகளை தருவார்.  

குரு4-ம் இடமான துலாம் ராசியில்  இருக்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. மன உளைச்சலையும், உறவினர் வகையில் பகையையும் உருவாக்குவார். சனிபகவான் முயற்சிகளில் வெற்றி தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.  

புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால்  மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம்.  தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும். ஜன.31, பிப்.1ல் சகோதரிகள் மூலம் நிறைய உதவி கிடைக்கும்.   ஜன.26,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையால் நன்மை நடக்கும். ஆனால் பிப்ரவரி 6,7-ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பிப்ரவரி 7-ந் தேதிக்கு பிறகு புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.  

சுக்கிரனால் குடும்பத்தில் வசதி பெருகும். செவ்வாயால் தீயோர் சேர்க்கைககு ஆளாகி, பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஜன.19க்கு பிறகு விடுபடுவர். தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாத முற்பகுதியில் சிறப்பான பலன்களை  காணலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஜன. 15,16, பிப்.11,12-ல் எதிர்பாராத பணவரவால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டி குறையும். ஜன.29,30, பிப்.2,3-ல் பொருள் விரயம், பணவிரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். ராகுவால் பொருட்களை களவு கொடுக்க நேரிடும்.

நிறுவனத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும். பணியாளர்கள் ஜன.30- வரை சிறப்பான பலனை பெறுவர். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாதமத்தியில் அதிகமாக உழைக்க வேண்டியது இருந்தாலும், அதற்கு தகுந்த மரியாதையும் வருமானமும் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியலாம்.  ஜனவரி 24,25-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். எதிலும் வெற்றி காணலாம்.

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மாதக்கடைசியில் மறையும். பொருளாதார வளம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். புகழ், பாராட்டு கிடைக்கும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மாணவர்களுக்கு குழப்பம் நிலவும்.  கவனம் தேவை. அதிக சிரத்தை எடுத்து படித்தால் தான் மதிப்பெண் உயரும். போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயிகள்
பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன்கள் இருக்காது.  வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் மகிழ்ச்சி காணலாம். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.

* நல்ல நாள்: ஜன.15,16,17,18,19,24,25,26,27, 28,31, பிப்.4,5,11,12
* கவன நாள்: ஜன.20,21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: கருப்பு, பச்சை

* பரிகாரம்:
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு.
● வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு.
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை.

 
மேலும் மார்கழி ராசிபலன் (16.12.2018 – 14.1.2019) »
temple
இந்தமாதம் முற்பகுதியில் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், ... மேலும்
 
temple
இந்த மாதம்  முக்கிய கிரகங்களில் 3-ல் இருக்கும் ராகு, 7-ல் இருக்கும் குரு சாதகமாக நின்று தொடர்ந்து நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச.29 வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து  நன்மை கொடுப்பார். ... மேலும்
 
temple
கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. சூரியன்  இந்த மாதம் தனுசுவிற்கு சென்று நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 6ல் இருக்கும் கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.  முயற்சிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.