Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): யோகம் வந்தாச்சு! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1): யோகம் ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3): சிறப்பான வளர்ச்சி துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3): ...
முதல் பக்கம் » மார்கழி ராசிபலன் (16.12.2018 – 14.1.2019)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2): போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
14:58

கனி போல் இனிக்கப் பேசும் கன்னி ராசி அன்பர்களே!

குரு, ராகு, செவ்வாய் மாதம் மாதம் முழுவதும் சாதகமாக நின்று நற்பலனை தருவர். சுக்கிரன் பிப்.6க்கு பிறகும், புதன் ஜன. 21- வரையும், பிப்.7-க்கு பிறகும் நன்மைகளை தருவர். ராகு, குருவால் இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்தநிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

அக்கம்பக்கத்தினர் தொல்லையில் இருந்து விடுபடலாம். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.  திருட்டு பயம் இருக்காது. பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஜன. 21-க்கு பிறகு கணவன்,- மனைவி இடையே அன்னியோன்ய  சூழ்நிலை இருக்காது. சிறு சிறு பிரச்னை வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். ஜன. 15,16,பிப்.11,12ல் உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வரலாம். அவர்களிடம் ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் ஜன.31,பிப்.1-ல் அவர்களின் உதவி கிடைக்கும். பிப்.7-க்கு பிறகு  தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு குரு பகவான் தொழில் விருத்தியைத் தந்து கொண்டிருக்கிறார்.  பெண்களை பங்குதாரராகக் கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். முக்கிய முடிவுகளை ஜன.21-க்குள் எடுத்து செயல்படுத்தினால் பலன் சிறப்பாக இருக்கும். மாத மத்தியில் அலைச்சல் அதிகரிக்கும். சூரியனால் போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கும். ஜன.20,21-ல் மனதில் அதீத மகிழ்ச்சி ஏற்படும் அளவு பணம் கொட்டும். பிப்.2,3,6,7-ல் பணம் விரயம் ஆகலாம். முயற்சிகளில் தடைகள் வரலாம்

பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம், கடன் கிடைத்தல் என சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். ஜனவரி 29,30-ல் எதிர்பாராத சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு. சில சம்பவங்கள் சிறந்த அனுபவத்தை தரும்.

கலைஞர்களுக்கு புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தத்தை பெறுவர். மாத முடிவில் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
அரசியல்வாதிகள் சிறப்பான பலனை பெறலாம். புதிய பதவி பெற வாய்ப்பு இருக்கிறது. தலைமையிடமிருந்து பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி ஏற்படும். முயற்சித்து படிப்பவர்களுக்கு மதிப்பெண் உச்சத்தைத் தொடும்.

விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.

* நல்ல நாள்: ஜன. 14,20,21,22,23,29,30,31 பிப். 1,4,5,8,9,10
* கவன நாள்: ஜன. 24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,8 நிறம்: நீலம், மஞ்சள்

பரிகாரம்:
● ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்.
● சனியன்று சனிபகவானுக்கு அர்ச்சனை.
● வெள்ளியன்று சுக்கிரனுக்கு நெய்தீபம்.

 
மேலும் மார்கழி ராசிபலன் (16.12.2018 – 14.1.2019) »
temple
இந்தமாதம் முற்பகுதியில் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், ... மேலும்
 
temple
இந்த மாதம்  முக்கிய கிரகங்களில் 3-ல் இருக்கும் ராகு, 7-ல் இருக்கும் குரு சாதகமாக நின்று தொடர்ந்து நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச.29 வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து  நன்மை கொடுப்பார். ... மேலும்
 
temple
கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. சூரியன்  இந்த மாதம் தனுசுவிற்கு சென்று நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 6ல் இருக்கும் கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.  முயற்சிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.