Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1): வீடு வாங்க யோகம் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1): ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3): முயற்சிக்கேற்ற வளர்ச்சி கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » புரட்டாசி ராசிபலன் (17.9.2018 - 17.10.2018)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2): விடாமுயற்சி வெற்றி தரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
15:18

மங்கல நிகழ்வுகளை விரும்பும் மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாய், சந்திரன் மாதம் முழுவதும் நன்மை தருவர். முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு, கேது ஆகியவை சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். செவ்வாய் பொருளாதார வளத்தை மேம்படுத்தி,  வீடு, வாகனம் வாங்க யோகத்தை அழைத்து வருவார் என்றாலும், குரு அந்த வகையில் அதிக செலவை ஏற்படுத்தி வைப்பார். ஒரு ரூபாய் பொருளை இரண்டு ரூபாய்க்கு வாங்க நிர்ப்பந்தம் செய்வார். சனி ஏழரையின் துவக்கத்தில் உள்ளார் என்றாலும், மகரம் அவரது சொந்த வீடு என்பதால் கொஞ்சம் விட்டுப்பிடிப்பார்.

குடும்பப் பெண்கள் பல வகையிலும் ஒத்துழைப்பு தருவர். அவர்களது பொன், பொருளை இக்கட்டான சமயங்களில் தந்து உதவுவர். ஜன.17,18,19-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சுக்கிரனால் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உறவினர்கள் வகையில் ஜன. 24,25-ல் கருத்து வேறுபாடு வரலாம்.  ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் பிப்.8,9,10-ல் அவர்களால் நன்மை கிடைக்கும்.  கணவன்-, மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் ஓரளவு லாபமடைவர். மாத ஆரம்பத்தில் பொருள் களவு ஏற்படவும், போட்டியாளர் வகையில் தொல்லையும் வரும். வரவு-,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மாத பிற்பகுதியில் லாபம் மேம்படும். அரசின் சலுகை, வங்கிக்கடன்  கிடைக்கும். ஜன.15,16,20,21 பிப்.11,12-ல் பண விஷயத்தை, நீங்களே நேரடியாக கண்காணிக்க வேண்டும்.  ஜன.29,30-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.

பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்கும். இடமாற்றம் உண்டு. மாதக்கடைசியில் பதவி உயர்வு கிடைக்கும். சலுகைகள் கிடைத்து முன்னேற்றம் காணலாம்.  அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும்.  பிப். 6,7ல் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அரசு வகையில் இருந்து வந்த  அனுகூலமற்ற போக்கு மறையும், தலைமையிடம் நல்ல பெயர் பெறுவர். ஜன. 26,27,28-ல் மனக்குழப்பம் ஏற்படும்.          

மாணவர்கள் அதிகமாக  உழைக்க வேண்டியதிருக்கும். அதற்குரிய பலன்கள் இப்போது இல்லாவிட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கும். மற்ற மாணவர் விஷயத்தில் தலையிட்டால் அவப்பெயர் வரும். சற்று ஒதுங்கி இருக்கவும்.

விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக இருந்த தொய்வு மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் . புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது. பக்கத்து நிலக்காரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள்  நீங்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள்  நல்ல வளர்ச்சி காண்பர். ஜன.22,23-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்: ஜன. 14,17,18,19,22,2329,30,31 பிப். 1,6,7,8,9,10
* கவன நாள்: பிப். 2,3 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6    நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்:
● வெள்ளியன்று காளிக்கு அர்ச்சனை.
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு.
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்.

 
மேலும் புரட்டாசி ராசிபலன் (17.9.2018 - 17.10.2018) »
temple
நேர்மை வழியில் நடக்க விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் முற்பகுதியில் நற்பலன் ... மேலும்
 
temple
குடும்பத்தினர் மீது அன்பு மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

இம்மாதம் பிற்பகுதியில் நற்பலன்கள் ... மேலும்
 
temple
நன்றி மறவாத மனம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

புதன் அக்.3 வரையும்,  குரு அக்.4 வரையும் நற்பலனைத் ... மேலும்
 
temple
கடமையில் பொறுப்புடன் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், சனி மாதம் முழுவதும் ... மேலும்
 
temple
விதியை மதியால் வெல்லும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் கடந்த மாதம் போலவே செவ்வாய், கேது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.