வால்பாறை: வால்பாறை ராமர் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை அண்ணாநகர் ராமர் கோவிலின், 40வது ஆண்டு திருவிழா நேற்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் தர்மகர்த்தா தர்மலிங்கம் திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. விழாவில், நாளை, (12ம் தேதி) பழநி பாதயாத்திரை குழுவின் சார்பில் பஜனை நடக்கிறது. 14ம் தேதி அலங்கார தேரில் சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.