சூரியனின் ஆதார சக்தியானவள்; ‘தீப்தா கவுரி ’ என்ற திருப்பெயரில் வணங்கப்படுகிறாள். இந்த தேவி, ஆதிபராசக்தியின் அனல் வடிவமாவாள் என்கின்றன ஞானநூல்கள். சூரியனின் அந்தராத்மாவில் வாழும் தீப்தா கவுரியை ‘சவிதா என்று போற்றுகின்றன. வேதங்கள். தீப்தா கவுரியே சூரியபகவானுக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், நிறங்களையும், சத்துக்களையும் தருகிறாள். ஆயிரம் திருமுகங்கள் கொண்ட தீப்தாகவுரியின் கண்களின் தீட்சண்யமே சூரியனின் கிரணங்களாக வெளிப்பட்டு, மற்ற கிரகங்களை வாழ்விக்கிறது என்கின்றன புராணங்கள்.