Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பாராத வருமானம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சுபநிகழ்ச்சி நடந்தேறும் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2018 – 14.3.2018)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)குடும்பத்தில் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
11:53

பொறுமைக்கு இலக்கணமாக திகழும் மிதுன ராசி அன்பர்களே!

புதன் பிப்.27-ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். சுக்கிரன் மார்ச் 3- வரையும், செவ்வாய் மார்ச் 10- வரையும் நன்மை தருவர். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.  ஆடை, ஆபரணம் சேரும்.  புதிய வீடு,  வாகனம் வாங்க யோகமுண்டு. குரு பிப்.14-ல் அதிசாரம் பெற்று 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார்.  உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சி உருவாகலாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது 9-ம் இடத்து பார்வையும் சாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் மந்த நிலை மாறும்.  வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். சூரியனால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. உங்கள் மீதான பொல்லாப்பு, அவப்பெயர் பிப்.26- க்கு பிறகு மறையும்.

சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும்.  பிப். 25,26-ல் சகோதர வழியில் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப். 21,22-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மார்ச்3,4,5-ல் அவர்களின் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் கவனம். மார்ச் 10-க்கு பிறகு வீண்அலைச்சல் ஏற்படலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம். அண்டை வீட்டாரால் பிரச்னை உருவாகலாம்.  உடல் நலனில் அக்கறை தேவை. பயணத்தின் போது கவனம் தேவை.  

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும்.  லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.  பிப்.26-க்கு பிறகு புதிய வியாபாரம் அனுகூலம் தரும்.  சேமிக்கும் வகையில் வருமானம் வரும்.  எதிரிகளின் சதி திட்டம் முறியடிக்கப்படும். பிப்.23,24,28ல் முயற்சியில் தடை வரலாம். மார்ச் 8,9- ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.  பிப்.26-க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். மார்ச் 9-க்கு பிறகு அனாவசிய செலவை குறைக்கவும்.

பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை மார்ச் 10-க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். குரு பார்வையால் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பிப்.18,19,20- ல் அதிர்ஷ்டவசமாக நன்மையை எதிர்பார்க்கலாம்.  பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.  தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் பிப். 26- க்கு பிறகு விடுபடுவர்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.  மார்ச் 3- க்கு பிறகு எதிரி தொல்லை, மறைமுகப் போட்டி வரலாம். ஆனால் புகழ், கவுரவத்திற்கு பங்கம் வராது.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் காண்பர்.  சிலருக்கு புதிய பதவியும் தேடி வரும். பிப். 26-க்கு பிறகு பெண்களால் வாழ்வில் உயர்வு உண்டாகும்.  மார்ச் 6,7-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும். பிப். 27-ல் புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.  நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும்.  விவசாயிகள் பொருளாதார வளம் காண்பர். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மார்ச் 10-க்குள் பயன்படுத்திக் கொள்ளவும். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த பிரச்னை மறையும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும்.  பெண்களுக்கு  மார்ச் 1,2-ல் ஆடை, ஆபரணம் சேரும்.  மார்ச் 10,11,12-ல் விருந்து விழா என சென்று வருவீர்கள்.

பிப். 26-க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். புதிய பதவியும் தேடி வரும்.

நல்ல நாள்: பிப்.18, 19, 20, 21, 22, 25, 26, 27 மார்ச் 1, 2, 8, 9, 10, 11, 12
கவன நாள்: பிப்.13,14,15,மார்ச்13,14- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2, 3; நிறம்: பச்சை, மஞ்சள்

* பரிகாரம்:
* நவக்கிரகங்களில் ராகுவுக்கு அர்ச்சனை
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2018 – 14.3.2018) »
temple
நல்ல மனம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!

புதன் பிப்.27- வரையிலும், சுக்கிரன் மார்ச் 3- வரையிலும் சாதகமான ... மேலும்
 
temple
துடிப்புடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் 10-ம் இடத்திற்கு வருவதால் நன்மை பன்மடங்கு ... மேலும்
 
temple
கடமையுணர்வுடன் பணியில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உள்ள சுக்கிரன் ... மேலும்
 
temple
சிங்கம் போல வெற்றி நடை போடும் சிம்ம ராசி அன்பர்களே!

மாதம் முழுவதும் கேது நற்பலன் கொடுப்பார்.  ... மேலும்
 
temple
குறையில்லாத மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!  

செவ்வாய் மார்ச் 10- வரை செவ்வாய் நன்மையை வாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.