Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பதவி உயர்வு கிடைக்கும் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) போட்டியில் வெற்றி விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வளர்ச்சிக்கான மாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
12:17

சாதனை படைப்பதில் விருப்பம் மிக்க துலாம் ராசி அன்பர்களே!

சுக்கிரன் மார்ச்3-  வரையும்,  புதன் பிப்.26க்கு பிறகும்,  செவ்வாய் மார்ச்9- க்கு பிறகும் நற்பலனை அளிப்பர்.  குரு, சனி மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர்.  இதனால் பொருளாதார வளம் கூடும்.  மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா வகையிலும் வளர்ச்சிக்கான மாதமாக அமையும்.

குருபகவான் பிப். 14-ல் அதிசாரம் பெற்று 2-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்ட பிரச்னை மறையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி விடுதலை கிடைக்கும்.  தொழிலில் மந்த நிலை இனி இருக்காது.  குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். வாழ்வில் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். பிப்.26- க்கு பிறகு எடுத்த முயற்சி வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தேறும்.  மார்ச் 9-க்கு பிறகு செவ்வாயால் பொன், பொருள் சேரும். புதிய வீடு, -மனை, வாகனம் வாங்க யோகம் உண்டாகும்.

குடும்பத்தில் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  பிப்.26-க்கு பிறகு கணவன்,-மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். மார்ச் 6,7 ல் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும்.  பிப்.13,14,15 ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் மார்ச் 1,2-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் அவ்வப்போது தடைகள் குறுக்கிடலாம்.  பிப்.26-க்கு பிறகு பணப்புழக்கம்  அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள், மீண்டும் வீடு திரும்புவர்.  பிப்.18,19,20-ல் சந்திரனால் எதிர்பாராத பணவரவு இருக்கும். அரசு வகையில் இருந்த  அனுகூலமற்ற போக்கு மார்ச்9- க்கு பிறகு மறையும்.  அது வரை வரவு- செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வேலை இன்றி இருப்பவர்கள்  புதிய தொழில் தொடங்கலாம்.

பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டியதிருக்கும். ஆனாலும் பிப்.26க்கு பிறகு நல்ல வளர்ச்சி காண்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். பிப் 27,28-ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. மார்ச் 9க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.  

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மார்ச் 2-க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.  தொழில்ரீதியான பயணம் மூலம் இனிய அனுபவம் உண்டாகும். மார்ச் 9-க்கு பிறகு  எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு.  மாணவர்களுக்கு பிப்.26- வரை கூடுதல் கவனம் தேவை.  குரு சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம்.  சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நெல், கரும்பு, சோளம் போன்றவற்றில் மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயர  வாய்ப்புண்டு.   வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும்.    மார்ச் 9-க்கு பிறகு புதிய சொத்து வாங்க காலம் கனிந்து வரும்.  பெண்கள் மாத தொடக்கத்தில் கணவரிடம் விட்டு கொடுத்து போகவும்.

பிப்.26 க்கு பிறகு நிலைமை சீராகும்.  தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். மார்ச் 10,11,12- ல் ஆடை, ஆபரணம் சேரும்.  பிப்.21,22-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். உடல் நலம் சுமாராக இருக்கும்.  பிப்ரவரி 25,26ல் வயிறு தொடர்பான பிரச்னை குறுக்கிடலாம்.

நல்ல நாள்: பிப்.18, 19, 20, 21, 22, 27, 28
மார்ச் 1, 2, 6, 7, 10, 11, 12
கவன நாள்: பிப்.23, 24-  சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7  நிறம்: மஞ்சள், கருப்பு

* பரிகாரம்:
* தேய்பிறை அஷ்டமியின்று பைரவருக்கு பூஜை
* வெள்ளியன்று மாலை லட்சுமிக்கு அர்ச்சனை
* திங்களன்று சிவன் கோயிலில் நெய் தீபம்

 
மேலும் தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019) »
temple
இந்த மாதம் சூரியன் 10-ம் இடத்திற்கு வந்து சாதகமான பலனை தர உள்ளார்.  புதன் ஜன.17ல் சாதகமான நிலைக்கு வந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் ராகு 3-ம் இடத்தில் இருந்தும், குரு 7-ம் இடத்தில் இருந்தும் மாதம் முழுவதும் நற்பலன்  ... மேலும்
 
temple
அதிக உழைப்பும்,  விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் ... மேலும்
 
temple
இந்த மாதம் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிக நன்மையைக் காணலாம். அதற்கு காரணம் புதன் ஜன.16 வரையும், ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன் மற்றும் கேதுவால் சிறப்பான பலன் காண்பீர்கள். சுக்கிரன் ஜன.30ல் 5-ம் இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.