Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வளர்ச்சிக்கான மாதம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது பொன்னாகும் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசிபலன் (18.10.2018 – 16.11.2018)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
12:20

நிர்வகிப்பதில் திறமைசாலிகளான விருச்சிக ராசி அன்பர்களே!

கேதுவால் நற்பலன் மாதம் முழுவதும் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரன் மார்ச்3-ல் இடம் மாறினாலும் தொடர்ந்து சாதகமான பலன் அளிப்பார்.  புதனால் பிப். 27- வரை நன்மை உண்டாகும். கேதுவால் பொருளாதார வளம் சிறக்கும். பக்தி உயர்வு மேம்படும். குருபகவான் பிப்.14-ல் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார்.   குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளன.

குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு உயரும்.  சுபவிஷயத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க வாய்ப்புண்டு. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  பிப்.16,17ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அப்போது சற்று விலகி இருக்கவும். ஆனால் மார்ச் 3,4-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 8,9-ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.26-க்கு பிறகு  கணவன்-, மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். மார்ச்3க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  உடல்நிலை சீராக இருக்கும்.   

தொழில், வியாபாரத்தில் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம்.   இருந்தாலும் லாபம் சீராக இருக்கும்.   மார்ச் 6,7,10,11,12ல் சந்திரனால் பண விரயம் ஆகலாம்.  பிப்.21,22-ல் எதிர் பாராத வகையில் பணம் கிடைக்கும்.  பிப். 26க்கு பிறகு தொழில் ரீதியாக பயணம் ஏற்படலாம். செவ்வாயால் இருந்த தடை, பகைவர் தொல்லை மார்ச்9- க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு,-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  புதிய பதவி தேடி வரும்.  பிப்.26க்கு பிறகு வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். வேலைப்பளு அதிகமாகும்.  கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். இருப்பினும் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பிரச்னை உண்டா காது.  மார்ச் 1,2- ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். மார்ச் 9-க்கு பிறகு அரசு
ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  சக கலைஞர்கள் மிகவும் ஆதரவு டன் செயல்படுவர்.  அரசியல்வாதிகள், சமூக நலசேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை காண்பர்.  மக்கள் மத்தியில் எதிர்பார்த்த பாராட்டு, புகழ் கிடைக்காது.

மாணவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஆசிரியர் களின் அறிவுரை கைகொடுக்கும். பிப்.26க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும். இருப்பினும் குருவின் பார்வையால் ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். கோதுமை, பழவகைகள் போன்றவற்றில் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகளால் உதவி கிடைக்கும்.  குருவின் பார்வையால் பணப்புழக் கம் அதிகரிக்கும்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பிப்.26-க்கு பிறகு குடும்பத் தாரிடம் விட்டு கொடுத்து போகவும்.  பிப்.13,14,15, மார்ச்13,14-ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம்.  வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.

நல்ல நாள்: பிப்.13, 14, 15, 21, 22, 23, 24,
மார்ச் 1, 2, 3, 4, 5, 8, 9, 13, 14
கவன நாள்: பிப்.25, 26- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5, 8; நிறம்:  நீலம், சிவப்பு

* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிேஷகம்
*சனிக்கிழமையில் சாஸ்தாவுக்கு நெய்தீபம்
* ஞாயிறு காலையில் நீராடி சூரிய வழிபாடு

 
மேலும் ஐப்பசி ராசிபலன் (18.10.2018 – 16.11.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

சாதகமற்ற நிலையில் இருந்த புதன், செவ்வாய் இந்த மாதம் ... மேலும்
 
temple
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் இந்த ... மேலும்
 
temple
பிறர் நலனில் அக்கறை காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் நற்பலன் தரக் ... மேலும்
 
temple
கருணை மனம் படைத்த கடக ராசி அன்பர்களே!

குரு,சுக்கிரன்,சனி நற்பலன் கொடுப்பர். அதோடு புதன் அக்.23 ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் முன்னேறும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், கேது ஆகியோர் சாதகமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.