Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தொட்டது பொன்னாகும் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசிபலன் (18.10.2018 – 16.11.2018)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பெண்களால் மேன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
12:23

மற்றவர் நலனில் அக்கறை காட்டும் மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் கிரக பலத்தால் நன்மை பன்மடங்கு அதிகரிக்கும். குரு பிப். 14-ந் தேதி அதிசாரம் பெற்று சாதகமான இடத்திற்கு வருவதே இதற்கு காரணம். செவ்வாய் மார்ச் 10- வரை நற்பலன் தருவார்.  சுக்கிரனால் கிடைத்த நற்பலன் தொடரும். பெண்களால் மேன்மை காண்பீர்கள். குருபகவான் பிப்.14ல் அதிசாரம் பெற்று 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு வருகிறார். இது  சிறப்பானதாகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். அவரின் 7 மற்றும் 9-ம் பார்வைகள் சிறப்பாக உள்ளன.

குருவால் ஏற்பட்ட பொருள் நஷ்டம், மன சஞ்சலம் முதலியன இனி இருக்காது.  மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். அன்றாட பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள்.  கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவை குறையின்றி பூர்த்தியாகும்.  பகைவரும் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை உண்டாகும்.  புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. பொன், பொருள் சேரும்.  பிப்.18,19,20-ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஆனால் மார்ச் 8,9- ல் உறவினர் வருகையும்,  அவர்களால் நன்மை ஏற்படும். பிப்.13,14,15, மார்ச்13,14ல் பெண்களால் நன்மை கிடைக்கும்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, மனக்கவலை பிப்.26க்கு பிறகு மறையும். மார்ச் 3-க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. குறிப்பாக கண் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்கவும்.

தொழில், வியாபாரத்தில் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். கடந்த காலத்தில் இருந்த பணவிரயம் மறையும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும்.  அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பிப்.16,17, மார்ச்10,11,
12-ல் சிறு தடைகள் குறுக்கிடலாம்.  பிப்.23,24-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கலாம்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் சுக்கிரனால் உங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படாது. அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.  சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.  பிப்.26-க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில்  அக்கறையுடன் இருக்கவும். மார்ச் 6,7- சிறப்பான நாட்களாக அமையும். பாதுகாப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் கோரிக்கைகளை மார்ச் 9-க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான பலன் காண்பர். பிப்.26-க்கு பிறகு போதிய வருமானம் இருந்தாலும் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அக்கறையுடன் படிப்பது அவசியம்.  போட்டியில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.

விவசாயிகள் எள், கரும்பு, கோதுமை, பழவகைகள் மூலம் நல்ல மகசூல் கிடைக்க பெறுவர். புதிய சொத்து மார்ச் 9-க்குள் வாங்கலாம். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர்.   பிப்.26- க்கு பிறகு குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும்.  கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குருவின் பார்வையால் தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். பிப்.18,19,20-ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.

நல்ல நாள்:  பிப். 13, 14, 15, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, மார்ச் 6, 7, ,9,13,14
கவன நாள்:  மார்ச் 1, 2- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2, 3  நிறம்: வெள்ளை,மஞ்சள்   

* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிேஷகம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை
* ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு

 
மேலும் ஐப்பசி ராசிபலன் (18.10.2018 – 16.11.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

சாதகமற்ற நிலையில் இருந்த புதன், செவ்வாய் இந்த மாதம் ... மேலும்
 
temple
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் இந்த ... மேலும்
 
temple
பிறர் நலனில் அக்கறை காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் நற்பலன் தரக் ... மேலும்
 
temple
கருணை மனம் படைத்த கடக ராசி அன்பர்களே!

குரு,சுக்கிரன்,சனி நற்பலன் கொடுப்பர். அதோடு புதன் அக்.23 ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் முன்னேறும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், கேது ஆகியோர் சாதகமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.