Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோவில் சொத்துக்களை மீட்க குழுக்கள் அமையுங்க! ஐகோர்ட் உத்தரவு கோவில் சொத்துக்களை மீட்க குழுக்கள் ... குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி: சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! ..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
11:03

ஒருமுறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய -  சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டதால், எங்கும் இருள் சூழ்ந்தது. உலகத்தார் கலங்கினர். உடனே சிவன், நெற்றிக்கண்ணை திறந்தார்.  அதிலிருந்து கிளம்பிய ஜூவாலை ஒளியை வணங்கினாலும், அதன் வெப்பம் தாளாமல் அனைவரும் பயந்தனர். பார்வதிதேவி, சிவனை அன்று  இரவு முழுக்க விழித்திருந்து அபிஷேகம் செய்து வணங்கி, அவரை குளிரச்செய்து, மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ வேண்டினாள். அவள்  விழித்திருந்து வணங்கிய இரவே, சிவராத்திரியாக கொண்டாட ப்படுகிறது. சிவனை வழிபட்ட பார்வதி, “இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை  வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு, வாழும் காலத்தில் செல்வமும், வாழ்வுக்கு பின் சொர்க்கமும் தரவேண்டும்,”  என்றாள். சிவனும் அந்த வரத்தை அருளினார்.


மகா சிவராத்திரி தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு.

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!

உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சிரவணபெளகொலா: சமணர்களின் கும்பமேளாவாக கருதப்படும், மஹாமஸ்தாபிஷேகம், கர்நாடக மாநிலம், ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராட ஆன் லைனில் டிக்கெட் பெற்று கொள்ளலாம். ... மேலும்
 
temple
தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple
பழநி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக, பழநி முருகன் கோயிலில் தீ விபத்து தடுப்பு ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலை மற்றும் பம்பையில், தேவசம் போர்டுக்கு சொந்தமான நிலத்தை அளந்து, எல்லை நிர்ணயம் செய்யும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.