Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள ... வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் 9 ம் நூற்றாண்டு கல்வெட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
01:02

சிவகங்கை: சிவகங்கை அருகே 9 ம் நுாற்றாண்டு வட்டெழுத்துகள் எழுதப்பட்ட மடை கண்டறியப்பட்டது.நாமனுார் நாமனிக் கண்மாயின் கிழக்கு பகுதியில் பழமையான மடை உள்ளது. இந்த மடையின் இருபுறமுள்ள கற்கள் 13 அடி உயரமுடையவை. அவற்றின் மேற்புறத்தில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன.அவற்றை புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழகத் தலைவர் கரு.ராசேந்திரன், சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி ஆகியோர் படியெடுத்தனர்.அவர்கள் கூறியதாவது: இந்த மடை கற்களில் எழுதப்பட்ட வட்டெழுத்துகள் 9 ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. அதில் ’ஸ்ரீஅவநி சுவரன் பெருமடை’ என எழுதப்பட்டுள்ளது. ’அவநிசுவரன்’ என்ற பெயர் பாண்டிய மன்னன் முதலாம் வரகுணபாண்டியனின் மகன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவனின் பட்டப்பெயர். அவர் பெருமடையை விவசாயிகளுக்காக ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மேலும் இப்பகுதியில் விவசாயம் செழித்தோங்கி இருந்துள்ளது. இக்கண்மாய் மூலம் பல நுாறு ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளன, என்றனர்.ஏற்கனவே இக்கண்மாயின் வடக்கு பகுதியில் கி.மு., மூன்றாம் நுாற்றாண்டைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வெள்ளைநிற கல்வட்டங்கள் காணப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar