Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)குழந்தை பாக்கியம் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம்:(கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அரசு வகையில் ஆதாயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம்:(கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அரசு வகையில் ஆதாயம்

பதிவு செய்த நாள்

13 மார்
2018
04:03

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் ஒன்றான ராகு 3-ம் இடத்தில் இருந்து சாதகபலன் கொடுப்பார். 11-ம் இடத்தில் இருக்கும் சூரியன், புதன் ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர். சுக்கிரன் மார்ச் 26- வரை நற்பலன் கொடுப்பார். குருபகவான் ஏப்.10- முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருவதால், அவரால் நன்மை தர இயலாது. திட்டமிட்டபடி முக்கிய செயல்களை நிறைவேற்றி கொள்ளலாம். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் குடியிருக்கும். கணவன், -மனைவி இடையே அன்பு மேலோங்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சொந்தபந்தங்களின் வருகை சந்தோஷத்திற்கு வழிவகுக்கும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள்.

சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவர். குறிப்பாக மார்ச் 22,23- ல் அவர்களால் கூடுதல் நன்மை கிடைக்க பெறுவீர்கள். விருந்து விழா என சென்று வருவீர்கள். மார்ச் 18,19- ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மார்ச் 28,29-ல் அவர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். மார்ச் 26,27-ல் புத்தாடை, நகைகள் வாங்க யோகமுண்டாகும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். உங்களால் குடும்பம் சிறப்படையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். குருபகவானால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். புதுமண தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏப். 4,5,6 ல் சகோதரர்களால் மேன்மை கிடைக்கும். மார்ச் 26,27ல் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். சிலர் வியாபாரத்தை விரிவு படுத்தும் வாய்ப்புண்டு. வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். விரிவாக்க பணிக்கான வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் திடீர் செலவுகள் உருவாகலாம். ஏப்.2,3-ல் எதிர்பாராமல் வருமானம் கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். மார்ச்20,21,24,25-ல் முயற்சிகளில் தடை குறுக்கிடலாம். ஏப்.9க்கு பிறகு பகைவர் தொல்லைக்கு ஆளாகலாம்.

பணியாளர்கள் வேலையில் திருப்தியும், நிம்மதியும் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு நல்லமுறையில் கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். மார்ச்15,16,17,ஏப்.11,12,13- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பெண்கள் உங்களின் முன்னே ற்றத்திற்கு உறுதுணையாக செயல்படுவர். மார்ச் 26க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் உழைப்புககு ஏற்ப உயர்வு காண்பர். மார்ச் 30,31, ஏப்.1- ல் வீண் குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோனையை ஏற்று முன்னேறுவர். புதனால் கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தேர்வில் நல்ல மதிப்பெண், போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். நெல், கேழ்வரகு, பழம், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகும்.

* நல்ல நாள்: -மார்ச் 15, 16, 17, 18, 19, 22, 23, 26, 27,  ஏப். 2, 3, 4, 5, 6, 11, 12, 13
* கவன நாள்: ஏப்.7,8 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்-: 1, 2, 3. நிறம்: - பச்சை, நீலம்

* பரிகாரம்:
* - சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை
* செவ்வாயன்று துர்க்கைக்கு நெய் தீபம்
* சனியன்று சனீஸ்வரருக்கு எள் விளக்கு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar