Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)குழந்தை பாக்கியம் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆடம்பர வசதி பெருகும் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பெண்களால் மேன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
17:12

காலத்தை பொன்னாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாய், சனி தொடர்ந்து நற்பலன் கொடுப்பர். அதோடு சுக்கிரன் மார்ச் 26- வரை நற்பலன் தருவார். குருபகவான் ஏப்.10- வரை 5-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது. அதன் பின் அவர் வக்கிரம் அடைந்து, துலாம் ராசிக்கு மாறுகிறார். அதன் பின் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது.

சூரியன் சாதகமற்ற இடத்திற்கு வருவதால் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. புதனால் சிலர் பொல்லாப்பை சந்திக்க வேண்டியதிருக்கும்.

குடும்பத்தில் பொறுமையுடன் விட்டுகொடுத்து போகவும். இருப்பினும் செவ்வாயால் ஆற்றல் மேம்படும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, -மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

மார்ச்22,23-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அவர்கள் வகையில் ஏப்ரல் 2,3-ல் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. அப்போது அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஏப். 6- வரை குரு பகவானால் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.  

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் அக்கறையுடன் இருப்பது அவசியம். சக ஊழியர்கள் மத்தியில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும்.

மார்ச் 30,31, ஏப்.1-ல் ஆடை, அணிகலன் வாங்க யோகமுண்டாகும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்க பெறலாம். ஏப். 9,10 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.  தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்லமுன்னே ற்றம் அடையும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்கலாம். எனவே புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. மார்ச் 26-க்கு பிறகு பகைவரால் தொல்லை அதிகரிக்கும். மார்ச் 24,25,28, 29ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஆனால் ஏப்.9,10- ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

பணியாளர்கள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். வேலையில்பொறுமை யும், நிதானமும் தேவைப்படும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.

நெருப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். மார்ச் 20,21- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மேலதிகாரிகள் உதவிகரமாக செயல்படுவர்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலருக்கு விருது, பாராட்டு கிடைக்க வாப்ப்புண்டு. சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மார்ச் 26-க்கு பிறகு எதிரி தொல்லை, மறை முகப்போட்டி குறுக்கிடலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் நற்பெயர் காண்பர். புதிய பதவியும் தேடி வரும். தொண்டர்களின் வகையில் திடீர் செலவு ஏற்பட வாய்ப்புண்டு.

மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். சிரத்தை எடுத்து படித்தால் தான் நல்ல மதிப்பெண் கிடைக்கும். சிலர் நண்பர்களால் தொல்லைக்கு ஆளாகலாம் கவனம். ஏப். 4,5,6 ல் குழப்பம் ஏற்படலாம்.

விவசாயிகள் போதிய மகசூல் கிடைக்க பெறுவர். மஞ்சள், நெல், சோளம், கேழ்வரகு, கொள்ளு போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை மூலம் போதிய பணம் வரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.

* நல்ல நாள்: -மார்ச் 20, 21, 22, 23, 26, 27, 30, 31, ஏப்.1, 7, 8, 9, 10
* கவன நாள்: மார்ச் 15, 16, 17, ஏப்.11, 12, 13
* அதிர்ஷ்டம் எண்-: 2,4 நிறம்: கருப்பு, சிவப்பு

* பரிகாரம்:
* புதன்கிழமை பெருமாள் கோயிலில் நெய் தீபம்
* செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு
* வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மாவிளக்கு

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.