Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பெண்களால் மேன்மை கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பொன், பொருள் சேரும் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆடம்பர வசதி பெருகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
17:13

சிந்தனையில் புதுமை படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், புதன் இணைந்து நன்மை தருவர். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உள்ள கேதுவால் செயலில் வெற்றி உண்டாகும். மனதில் துணிச்சல் பிறக்கும். அபார ஆற்றல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரணடையும் நிலை உருவாகும். நகை, -ஆபரணம் வாங்கலாம். புதன் 8-ம் இடத்தில் இருந்து குடும்ப நிலையை மேம்படுத்துவார்.

தற்போது ராசிக்கு 4-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கும் குருபகவான், ஏப்.10- முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருவதால் நற்பலன் கொடுக்க முடியாது. இருந்தாலும், சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் ஆடம்பர வசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர்.

குடும்பத்தில அனுகூலமான சம்பவம் ஒவ்வொன்றாக நடந்தேறும். மனம் போல புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். கணவன்-, மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை உண்டாகும். மார்ச்24,25ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

அதே நேரம் ஏப்.4,5,6-ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. செவ்வாயால் ஆரோக்கியம் குறையலாம்.  

பெண்கள் சிறப்பான வாழ்வு அமைய பெறுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் காண்பர்.

மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு வந்து சேரும். ஏப். 12,13- ல் புத்தாடை,
ஆபரணம் சேர வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வர பெறலாம். மார்ச் 15,16,17, ஏப்.11,12,13 ஆகிய நாட்களில் இனிய அனுபவம் கிடைக்க பெறுவர். சகோதர வழியில் நன்மை உண்டாகும். அக்கம் பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குருவால் ஏற்பட்ட மனஉளைச்சல், வீண்பகை ஏப்.9-க்கு பிறகு மறையும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். லாபத்திற்கு குறைவிருக்காது. உங்களை எதிர்த்தவர்கள் தவிடு பொடியாவர். புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்து கொள்ளவும். மார்ச் 26,27,30,31, ஏப்.1-ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். ஏப்.9,10ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்கள் புதன், சுக்கிரன் பலத்தால் சிறப்பான வளர்ச்சி காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உங்களின் திறமை  பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். எதிரிகளின் சதி திட்டம் முறியடிக்கப்படும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். மார்ச் 22,23 சிறப்பான நாட்களாக அமையும். ஏப்.9-க்கு பிறகு பணியில் பொறுமை, நிதானம் பின்பற்றவும்.

கலைஞர்கள் சிறப்பான பலனை காணலாம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக பெண்கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். தொழில்ரீதியான பயணம் அடிக்கடி மேற்கொள்வர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயர், பொருளாதார வளம் பெறுவர். மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் நல்ல பொருளாதார வளம் காண்பர். கிழங்கு, காய்கறி, பழவகை
பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.

* நல்ல நாள்: மார்ச் 15, 16, 17, 22, 23, 24, 25, 28, 29,  ஏப்.2, 3, 9, 10, 11, 12, 13
* கவன நாள்: மார்ச் 18, 19 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்டம் எண்-: 5,7 நிறம்:- பச்சை, வெள்ளை

* பரிகாரம்:-
* செவ்வாயன்று முருகனுக்கு நெய் தீபம்
* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.