Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ஆடம்பர வசதி பெருகும் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)வளர்ச்சிக்கான காலம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பொன், பொருள் சேரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
17:14

கடமையில் ஆர்வமுடன் ஈடுபடும் கன்னி ராசி அன்பர்களே!

ராகு 11-ம் இடத்தில் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன் மார்ச் 27-ல் மேஷ ராசிக்கு வருவதால் ஆடம்பர வசதி பெருகும். குரு ஏப்.10-ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடந்தேறும். ஆனாலும் மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லாததால், முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சற்று சிந்தித்தே செயல்பட வேண்டும். பொறுப்புகளை குடும்ப பெரியோர்கள் வசம் ஒப்படைத்தால் வெற்றிகரமாக நிறைவேறும். தேவையான வருமானம் இருந்தாலும், அனாவசிய செலவை தவிர்த்து சிக்கனம் பின்பற்றுவது நல்லது. சூரியன் 7-ம் இடத்தில் இருப்பதால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். சமூக மதிப்பு சுமாராகவே இருக்கும்.

குடும்பத்தில் ராகுவால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். தம்பதியிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு உருவாகி மறையும்.

மார்ச் 30,31, ஏப்.1 ல் சகோதர வகையில் உதவி கிடைக்க பெறுவீர்கள். மார்ச் 26,27ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.7,8ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. எனவே அப்போது அவர்கள் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். ஏப். 9-க்கு பிறகு குருவால், ஆற்றல் மேம்படும். இது வரை இருந்த மந்த நிலை மாறும். படிப்படியாக வருமானம் அதிகரிக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் விஷயங்களில் பொறுமையுடன் விட்டு கொடுத்து போகவும். குழந்தைகளின் நற்செயலால் பெருமிதம் கொள்ள வாய்ப்புண்டு. ஏப்.4,5,6-ல் புத்தாடை, ஆபரணம் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். மார்ச் 18,19- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். நண்பர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிரிகளால் இடையூறு குறுக்கிடலாம். எனவே பகைவர் வகையில் ஒரு கண் எப்போதும் இருப்பது நல்லது. உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் படிப்படியாக விலகும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மார்ச் 26க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவர்.

மார்ச்28,29 ஏப்.2,3- ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மார்ச் 15,16,17 ,ஏப்.11,12,13- ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.

பணியாளர்கள் சுமாரான பலனை காணலாம். வேலைப் பளு சற்று அதிகமாகவே இருக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். குறிப்பாக அரசு ஊழியர்கள் பணியிடத்தில் விழிப்புடன் செயல்படவும். மார்ச் 24,25 சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் சுக்கிரன் சாதகமற்ற நிலையில் காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்காது. மார்ச் 26க்கு பிறகு பின் தங்கிய நிலை மறைந்து முன்னேற்றம் காண்பர்.

தடைபட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  ரசிகர்களின் மத்தியில் புகழ் வளரும். சிலருக்கு விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. பெண்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறுவதில் தாமதம் உண்டாகும். சமூகநல சேவகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சோம்பலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறுவர். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிக சிரத்தை எடுத்தால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.

* நல்ல நாள்: மார்ச் 15, 16, 17, 18, 19, 24, 25, 26, 27, 30, 31, ஏப்.1, 4, 5, 6, 11, 12, 13
* கவன நாள்: மார்ச் 20, 21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்- 7, 8 நிறம்: நீலம், வெள்ளை

* பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* சதுர்த்தியன்று விநாயகருக்கு விளக்கு
* பிரதோஷத்தன்று நந்திக்கு பால் அபிஷேகம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.