Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பொன், பொருள் சேரும் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) ஆன்மிக சுற்றுலா விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)வளர்ச்சிக்கான காலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
17:18

பிறர் துன்பத்தில் தோள் கொடுக்கும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் வளர்ச்சிக்கான காலகட்டமாக அமையும். ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பிரச்னை தந்த சூரியன் 6-ம் வீடான மீன ராசிக்கு செல்வது சாதகமான அமைப்பாகும். புதனும் சுப ஸ்தானத்திற்கு வந்து விட்டதால் பிரச்னைக்கு விடைகொடுத்து முன்னேற்றம் காணலாம். 3-ம் இடத்தில் உள்ள செவ்வாய்,சனி தொடர்ந்து நற்பலன் தர காத்திருக்கின்றனர். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும்.

தற்போது நன்மை தந்து கொண்டிருக்கும் குருபகவான் ஏப். 10- முதல் வக்கிரம் அடைந்து உங்கள் ராசிக்கு வருகிறார். அதன் பின் அவரால் நன்மை குறைய தொடங்கும். சூரியன், புதனின் பலத்தால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். கேது, ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது பிரச்னை தலைதூக்கலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி குடியிருக்கும். புதனால் கணவன், மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு விலகும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெற்றோருக்கு பெருமை தேடி தருவர். திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சி விமரிசையாக நடந்தேறும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி பெருகும்.

ஏப். 2,3- ல் பெண்களால் நன்மை கிடைக்கும். மார்ச்28,29ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.9,10ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம்.  

பெண்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வு நடத்துவர். நற்செயலில் ஈடுபட்டு குடும்பத்தாருக்கு பெருமை சேர்ப்பர். அண்டை வீட்டார் தொல்லை குறையும். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் மளமளவென கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரி களின் ஆதரவு இருக்கும். மார்ச் 20,21- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.
சகோதரிவழியில் நன்மையை எதிர்பார்க்கலாம். ஏப்.7,8-ல் புத்தாடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு.  

தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் அதிக வருமானத்தை காணலாம்.
எதிரிகளால் குறுக்கிட்ட முட்டுக்கட்டை விலகும். கேதுவால் பிரச்னை தலைதூக்கினாலும் பாதிப்பு உண்டாகாது. புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆனாலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள், விரைவில் வீடு திரும்புவர். சக தொழிலதிபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மார்ச் 18,19-ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சியை அடைவர். சக ஊழியர்களின் மத்தியில் மதிப்பு அதிகரி க்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு விரைவில் கிடைக்கும். விரும்பிய இட, பணி மாற்றம் கிடைக்க பெறுவர். வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். விண்ணப்பித்த கடனுதவி வந்து சேரும். மார்ச் 26,27- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.  

கலைஞர்கள் சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். முயற்சி களில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மார்ச் 26-க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொது நலசேவகர்கள் பதவி கிடைக்க பெறுவர்.

மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர்.போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். எதிர்பார்த்ததை விட விளைச்சல் சிறப்பாக இருக்கும். கீரை வகைகள், காய்கறிகள், மஞ்சள், நெல், கோதுமை
போன்றவை மூலம் அதிக மகசூல் உண்டாகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும்.

* நல்ல நாள்: மார்ச் 18, 19, 20, 21, 26, 27, 28, 29, ஏப்ரல் 2, 3, 7, 8
* கவன நாள்: -மார்ச் 22, 23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்டம் எண்-: 3, 5, 9 நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:

* வெள்ளியன்று லட்சுமி தாயாருக்கு தீபம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* பவுர்ணமியன்று அம்மனுக்கு பாலாபிஷேகம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.