Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)வளர்ச்சிக்கான காலம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) ஆன்மிக சுற்றுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
17:20

விதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே!

3-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் தொடர்ந்து நன்மை கிடைக்கும்.  சுக்கிரனால் மார்ச் 26-  வரை நன்மை பெற வாய்ப்புண்டாகும்.  மற்ற கிரகங்கள் அனைத்தும்  சுமாரான பலன் தரும் நிலையில் இருக்கின்றன. கேதுவின் பலத்தால் மனதில் பக்தி உயர்வு மேம்படும். இதனால் முயற்சியில் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும்.  சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். பகைவர் தொல்லை படிப்படியாக குறையும்.  பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  தற்போது உங்கள் ராசியில் இருக்கும் குருபகவான் ஏப்.10-  முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். அப்போதும் அவரால் நற்பலன் தர முடியாது.

குடும்ப தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சில பிரச்னைகள் குறுக்கிடலாம். கணவன்-, மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போவது நல்லது. சிலர் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை பின்பற்றுவது நிம்மதிக்கு வழிவகுக்கும்.  மார்ச் 30,31, ஏப். 1-ம் தேதிகளில் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மார்ச் 15,16,17 ஏப்ரல் 11,12,13ம் தேதிகளில் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். சற்று  ஒதுங்கி இருக்கவும். ஏப். 4,5,6- ல் பெண்கள் உதவி கரமாக செயல்படுவர்.

பெண்கள் உறவினர்களுடன்  புனித தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வர். உங்கள் முன்னேற்றத்திற்கு தோழிகள் உதவிகரமாக செயல்படுவர்.  கணவர் மற்றும்குடும்பத் தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.  பணிபுரியும் பெண்கள் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம். 

தொழில், வியாபாரத்தில் அவ்வப்போது எதிரி தொல்லையை சந்திக்கலாம். ஆனால் சுக்கிரனால் லாபம் அதிகரிக்கும்.  பணத்திற்கு சிறிதும் குறை இருக்காது. கூட்டாளி களிடையே ஒற்றுமை பலப்படும். பெண்கள் வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். எனவே சற்று விழிப்புடன் இருக்கவும். புதிய முதலீட்டு விஷயத்தில் கவனம் தேவை. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, -செலவு கணக்கை சரியாக வைத்து கொள்ளவும். 

மார்ச் 20,21-ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். புதனால் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பணியாளர்கள் சுக்கிரனால் சிறப்பான நன்மை காண்பர்.  எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை மார்ச் 26-ம் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.  புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகலாம். முக்கிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். ஆனாலும் மார்ச் 28,29-ம் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.  

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.   மார்ச் 26-க்கு பிறகு சுக்கிரன் சாதமற்ற நிலையில் காணப்படுவதால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண முடியும். சிலருக்கு எதிர்பாராமல் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். பெற்றோர், ஆசிரியர் களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது அவசியம்.

விவசாயிகள் நல்ல வருமானத்தை பெறுவர். குறிப்பாக பழ வகைகள், பயறு வகைகள் போன்ற  பயிர்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடி  புதிய சொத்து  வாங்க யோகமுண்டு. 

* நல்ல நாள்: -மார்ச் 20, 21, 22, 23, 28, 29, 30, 31 ஏப்ரல் 1, 4, 5, 6, 9, 10
* கவன நாள்: மார்ச் 24, 25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்டம் எண்-: 6, 7 நிறம்-: சிவப்பு,வெள்ளை

* பரிகாரம்:
* -வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
* சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
* சுவாதியன்று மாலையில் நரசிம்மர் வழிபாடு

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.