Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) ஆன்மிக சுற்றுலா விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பிள்ளைகளால் பெருமை மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
17:21

தர்ம சிந்தனையுடன் பிறருக்கு உதவும் தனுசு ராசி அன்பர்களே!

இந்த மாதம் 4-ம் இடத்தில் உள்ள சுக்கிரன், புதனால் நன்மை பெருகும். குருபகவான் ஏப்.10-ல் வக்கிரம் அடைந்து சாதக இடமான துலாம் ராசிக்கு வருகிறார். பக்தி உயர்வு மேம்படும். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். சேமிக்கும் விதத்தில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். சமூகத்தில் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். குடும்பம் முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போடும். கணவன்-, மனைவி இடையே அன்பு பெருகும். திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சிகள் கைகூடும். பொன், பொருள் சேரும். மார்ச் 18,19-ந் தேதிகளில் உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு என்பதால் சற்று விலகி இருக்கவும். அதே நேரம் ஏப். 2,3-ந் தேதிகளில் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஏப்.9-க்கு பிறகு அபார ஆற்றல் பிறக்கும். சிலருக்கு வீடு,மனை வாங்க யோகமுண்டு. குடும்பத்தினர் உறுதுணையாக செயல்படுவர்.

பெண்கள் சிறப்பான நிலை பெறுவர். அவர்களுக்கு குடும்பத்தினர் மத்தியில் மதிப்பு உயரும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். மார்ச் 15,16,17, ஏப்.11,12,13ம் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரலாம். மார்ச் 24,25-ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. சக ஊழியர்கள் மத்தியில் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. குருவால் ஏற்பட்ட விரயம், அலைச்சல் முதலியன ஏப்.9-க்கு பிறகு மறையும்.அதன் பிறகு நன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் சூரியனால் பெண்களிடம் விரோதம் ஏற்படும். அரசிடம் எதிர்பார் த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிலர் அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்கலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்து கொள்ளவும்.  ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ஏப்.4,5,6,9,10ம் தேதிகளில் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மார்ச் 22,23-ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.

பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். ஏப்.10-ம்தேதிக்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். பணியிடத்தில் திறமை பளிச்சிடும். விண்ணப்பித்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மார்ச் 30,31, ஏப்.1- ஆகிய நாட்களில் சிறப்பான நன்மை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைப்பது நல்லது. அரசு வேலையில் இருப்பவர்கள் அக்கறையுடன் இருக்கவும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பொருளாதார நிலையில் எந்த தொய்வும் இருக்காது. சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்களுக்கு நன்மை தரும் காலம். இதை பயன்படுத்தி படித்து முன்னேற வழி காண்பது நல்லது. போட்டி,
பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் சீரான பலன் கிடைக்க பெறுவர். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். மஞ்சள்,நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும்.

* நல்ல நாள்: மார்ச் 15, 16, 17, 22, 23, 24, 25, 30, 31, ஏப். 1, 2, 3, 7, 8, 11, 12, 13
* கவன நாள்: - மார்ச் 26, 27 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்டம் எண்:- 1, 7 நிறம்- பச்சை, வெள்ளை

பரிகாரம்:-
*  ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
* அஷ்டமி நாளில் பைரவருக்கு நெய் தீபம்
* ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.