Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் ... ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயில் : பக்தர்கள் அவதி ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் மாசி- பங்குனி விழா: விழாக்கோலம் பூண்ட காரைக்குடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2018
11:03

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது, விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும்,  பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Default Image

Next News

மகான்கள் ஒவ்வொரு ஆற்றலுக்கும் ஒரு இறைப்பெயரை சூட்டினர். அதன்படி உடலில் ஏற்படும் வெம்மையை போக்கும் சக்தியை, மாரியம்மன் என அழைத்தனர். மழை தருவதால் இந்த அம்மனுக்கு மாரி (மழை) எனவும் பெயர் ஏற்பட்டது.  செட்டிநாடு சீமையில் அருளாட்சி புரியும் காரைக்குடி மீனாட்சிபுரம் மாரியம்மன், சகல வல்லமையும் அருளும் சக்தியாக வீற்றிருக்கிறாள். இவளை நம்பி வந்தோருக்கு எக்காலமும் துன்பம் இல்லை. சிறுமியாய் வந்தாள் 1956-ம் ஆண்டு நவம்பர் 8-ம் நாளில் லலிதா என்ற பெயருடன் 8-வயது சிறுமி மீனாட்சிபுரத்திற்கு வந்தாள். அவளது மேனி முழுவதும் அம்மை பரவியிருந்தது.

இச்சிறுமியின் வார்த்தைகள் அருள் வாக்காக மாறின. அருள்வாக்கால் பல அதிசயங்களை நிகழ்த்திய தெய்வ சிறுமி பற்றிய பேச்சு உயிர் மூச்சாய் பரவியது. தெய்வ சிறுமி ஒரு நாள் தன்னை சுற்றி இருப்போரிடம், ‘‘நான் மகமாயியாக மாறி என் ஆலயம் வரும் அனைவருக்கும் அருள் பாலிக்க போகிறேன்.  நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் எனக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடுங்கள்’’ என சொல்லி தற்சமயம் ஆலயம் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினாள். என்னை வழிபடுவோருக்கு நோய் நொடி தீரும். மன மகிழ்ச்சி கூடும். சகல சம்பந்துகளும் பெருகும். கன்னியருக்கு மணமாகும். தம்பதியருக்கு குழந்தை பேறு கிட்டும். காளையருக்கு வேலை வரும். மொத்தமாய் சொன்னால் ஐஸ்வரிய நலன் தேடி வந்து மகிழ்வூட்டும், என சொல்லி முக்தி அடைந்தாள். அன்று முதலே லலிதாம்பிகை அன்னை முத்துமாரியாய் அவதரித்தாள்.

நின்ற அம்மன்:
கர்ப்ப கிரகத்தில் முத்துமாரியம்மன் நின்ற நிலையிலும், அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது, அம்மன் சிரசு அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன் திருஉருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தை அடுத்து கொடி மரம் அமைந்துள்ளது. முத்துமாரியம்மன் உற்சவம் விக்கிர பாதுகாப்பின் பொருட்டு கர்ப்ப கிரகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

மாசி - பங்குனி பெருவிழா:
இத்திருக்கோயிலின் முக்கியமான விழா மாசி - பங்குனி விழாவாகும். மாசி மாத கடைசி செவ்வாய் கிழமையில் அம்பாளுக்கு காப்பு கட்டி  தொடங்கும். பங்குனி முதல் செவ்வாயில் எட்டாம் நாளில் அம்பாளுக்கு பொங்கல் வைத்தல், மது, முளைப்பாரி, கரகம், அக்னி சட்டி எடுத்தல், 9-ம் நாளில் பால்குடம், பூக்குழி இறங்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பால்குடங்கள் கொண்டு வரும் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது என சொல்லலாம்.  ஆயிரக்கணக்காய் பால்குடங்களை தலையில் தாங்கி வரும் பக்தர்களை பார்க்க கூடுகிற கண்களோ கோடிக்கணக்காகும். முத்துமாரியம்மன் சிறுமியாக வந்து அருள்பாலிப்பதால் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி தந்த தாய்க்கு குழந்தை முதல் பெரியோர்கள் வரைபால்குடம் சுமந்து வந்து செல்லும் காட்சி பேரின்ப பெருக்கு.

ஊர் மகிழும் விழா: ஒவ்வொரு ஆண்டும் மாசி - பங்குனி விழா 39 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு இந்நகர மக்கள் மோர், அன்னதானம், குளிர்பானம் வழங்குவதை பாக்கியமாக கருதுகின்றனர். இத்திருநாளில் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் நடப்பாண்டு விழா கடந்த மார்ச் 13-ம் தேதி காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 9:30 மணிக்கு திருக்கோயில் காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம், மாலை 4:00 மணிக்கு கரகம், மதுக்குடம், முளைப்பாரி புறப்பட்டு பருப்பூரணி கங்கையில் விடுதல், இரவு 8:20 மணிக்கு காப்பு பெருக்குதல், நாளை இரவு 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, 23-ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar